ஜல்லி, எம் சாண்ட் விலை உயருகிறது.. பிப்ரவரி 1 முதல் புதிய கட்டணம் அமல் : வெளியான முக்கிய அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
24 January 2024, 12:06 pm
M Sand
Quick Share

ஜல்லி, எம் சாண்ட் விலை உயருகிறது.. பிப்ரவரி 1 முதல் புதிய கட்டணம் அமல் : வெளியான முக்கிய அறிவிப்பு!!

கோவை மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட கிரசர்கள் மற்றும் குவாரிகள் செயல்பட்டு வருகிறது. கட்டுமான தொழிலை நம்பி செயல்படும் கிரஷர் மற்றும் குவாரிகள் தற்போது கடும் நெருக்கடியில் இருக்கிறது.

தமிழக அரசின் கனிமவளத் துறை ராயல் டி கட்டணத்தை இரு மடங்கு அதிகரித்துள்ளது. மின் கட்டணமும் இரு மடங்கு ஆகிவிட்டது. ஜி எஸ் டி துறை மூலமாக கிரசர் மற்றும் குவாரிகளுக்கு கடும் நெருக்கடி வழங்கப்பட்டு வருகிறது.

கட்டுமான பணிகளுக்கு கிரஷர் மற்றும் குவாரி தொழிலுக்கான ஆட்கள் பற்றாக்குறை அதிகமாகியுள்ளது. வேலை ஆட்களுக்கான கூலி உயர்வும் இரு மடங்கு ஆகிவிட்டது.

மெஷனரிக்கான உதிரிபாகங்கள் விலை உயர்வு அதிகமாகிவிட்டது லாரிகளுக்கான வரியும் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த இக்கட்டான சூழலில் கட்டுமானத் துறைக்கு ஆதாரமாக இருக்கக்கூடிய கிரஷர் மற்றும் குவாரிகளில் தயாரிக்கப்படும் கட்டுமான பொருட்களை விலை ஏற்றம் தவிர்க்க முடியாததாகி விட்டது.

ப்ளூ மெட்டல், ஜல்லி, வெட்மிக்ஸ் யூனிட் 3000 ரூபாய் மற்றும் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு போக்குவரத்து கட்டணம் ஆயிரம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எம் சாண்ட் 4000 ரூபாய் மற்றும் ஆயிரம் ரூபாய் போக்குவரத்து கட்டணம், பி சாண்ட் யூனிட் 5000 ரூபாய் மற்றும் ஆயிரம் ரூபாய் போக்குவரத்து கட்டணம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர அனைத்து கனிம பொருட்களும் யூனிட்டுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படும். வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் இந்த புதிய கட்டண உயர்வு நடைமுறைக்கு கொண்டுவரப்படும்.

கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து கிரசர் மற்றும் குவாரிகளின் மூலமாக இந்த புதிய கட்டண உயர்வு நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கட்டுமானத்துறையினர் இந்த புதிய கட்டண உயர்வுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

இந்த தகவலை KCP Infra Limited நிறுவனரும், கோவை மாவட்ட கிரஷர் மற்றும் குவாரி நலச்சங்கத் தலைவருமான K.Chandraprakash அவர்கள் கூறியுள்ளார்.

மேலும் VSI சாண்ட் மூலம் தான் எம் சாண்ட் தயாரிக்கக வேண்டும் என சொல்லியுள்ளதால், VSI மெஷின் இல்லாதவர்கள் உடனடியாக ஒரு மாதத்திற்குள் அந்த மெஷினை பயன்படுத்த வேண்டும்.

எம் சாண்ட் உரிமத்தை வைத்துக் கொண்டு கிரஷர் ஆபரேட் செய்வதை நிறுத்த வேண்டும் . இது குறித்து ஏராமளான புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

விலையேற்றத்தை நிலைப்படுத்த வேண்டுமென்றால், நமக்குள் இருக்கும் தவறுகளை சரி செய்ய வேண்டும் என்றும், எம் சாண்ட் உரிமத்தை வைத்து கொண்டு கிரஷர் ஆபரேட் செய்வது தவறு. இதை கட்டுப்படுத்தினால் மட்டுமே விலையேற்றத்தை நிலைநிறுத்த முடியும்.

விலையேற்றம் செய்ய முக்கிய காரணம், ஜிஎஸ்டியில் எல்லா கிரஷர்களுக்கு 20 முதல் 25 லட்சம் ரூபாய் அபராதம் வர வாயப்புள்ளது என்பதால் விலையேற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி இல்லாமல் எந்த பொருளையும் விற்பனை செய்ய வேண்டாம். அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்தால், ஜல்லி விலை 5 ஆயிரத்திற்கு விற்பனை செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 271

0

0