வரும் 31ஆம் தேதி திருப்பூர் அலகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டி : முன்னேற்பாடுகள் தீவிரம்!!

22 January 2021, 2:11 pm
Tirupur Jallikkattu - Updatenews360
Quick Share

திருப்பூர் : ஜல்லிக்கட்டு போட்டி வரும் 31ம் தேதி நடைபெற உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்தது.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் தை பொங்கலை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடந்தது வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம் அலகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டி வரும் 31ம் தேதி நடக்கிறது.

இந்த ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பான முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்தது. மாவட்ட ஆட்சியர் விஜயகார்திகேயன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், மாவட்ட காவல் காண்காணிப்பாளர், அரசு அதிகாரிகள் மற்றும் ஜல்லிக்கட்டு நல குழுவினர் கலந்து கொண்டனர்.

இதில் பொதுமக்களுக்கான ஏற்பாடுகள், மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான வசதிகள், வாகனங்கள் நிறுத்த செய்யப்படும் ஏற்பாடு உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

Views: - 0

0

0