காட்சிப்படுத்தப்பட்ட விலங்கினங்கள் பட்டியலில் இருந்து ஜல்லிக்கட்டு மாடுகளை அகற்ற வேண்டும்: ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கம் மனு..!

Author: Vignesh
7 November 2022, 6:44 pm
pressmeet -updatenews360
Quick Share

ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கம் சார்பில் இன்று அச்சங்கத்தின் மாநில தலைவர் ஒண்டிராஜ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்

தமிழர்களின் பாரம்பரிய கலாச்சார திருவிழாவான ஜல்லிக்கட்டு தொன்மையான தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்று இருக்கிறது இந்த கலாச்சார திருவிழாவை தடை செய்யும் நோக்குடன் சுமார் 15க்கும் மேற்பட்ட அமைப்புகள் தற்போது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

கடந்த 2014 பீட்டா உள்ளிட்ட சில அமைப்புகள் ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என்றும் காட்சி படுத்தப்பட்ட விலங்கினங்கள் பட்டியலில் ஜல்லிக்கட்டு மாடுகள் இணைக்கப்பட்டுள்ளதால் அவைகளை வைத்து விழா நடத்தக் கூடாது என்பதை முன் வைத்தனர். ஆனால் 2017 ஆம் ஆண்டு பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு தமிழக ஆளுநர் மற்றும் குடியரசு தலைவரின் ஒப்புதலுடன் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனுமதியும் சட்டமும் இயற்றப்பட்டது.

தற்போது மீண்டும் 15க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என்று கூறி மனு அளித்துள்ள நிலையில் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச் சங்கம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்துள்ளோம். வருகின்ற 23ஆம் தேதி அதற்கான விசாரணை நடைபெறுகிறது.
எனவே முதல் கட்டமாக ஜல்லிக்கட்டு மாடுகளை காட்சிப்படுத்தப்பட்ட விலங்கினங்கள் பட்டியலில் இருந்து அகற்ற வேண்டும் எந்தவித தடையும் இல்லாமல் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தமிழக அரசும் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கமும் தொடர்ந்து போராடும் என்று கூறினார்.

மேலும் இது தொடர்பாக முதல்வரை சந்திப்பதற்கான முயற்சிகள் எடுத்து வருகிறோம். அதேபோல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லிக்கட்டு நடந்த இடங்களை விட ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான சட்டம் இயற்றப்பட்ட பிறகு சுமார் 500க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இனி எதிர்காலங்களிலும் அதிக இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான சூழல் உருவாகும் என்று கூறுகின்றனர்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் சங்க நிர்வாகிகள் சூரியூர் ராஜா, ராஜேஷ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Views: - 503

0

0