ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்வதற்காக ரயிலில் நகைகள் கடத்தல் : கோவை – சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்தியவர் கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
10 February 2022, 5:07 pm

கோவை : ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு செய்யும் பொருட்டு கோவை ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூபாய் 1.78 கோடி தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

கோவையில் இருந்து சென்னை சென்ற எக்ஸ்பிரஸ் ஈரோடு ரயில் நிலையம் வந்தது. அப்போது அந்த ரயிலில் டி_4 பெட்டியில் கோவை செல்வபுரம் சரோஜினி நகரைச் சேர்ந்த அழகிரி என்பவர் பயணம் செய்தார்.

அவர் வைத்திருந்த பையை சேலம் ரயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் அணில் குமார் ரெட்டி சந்தேகத்தின் பெயரில் சோதனை செய்தார்

அதில் கணக்கில் வராத 3.900 கிராம் எடையுள்ள தங்க ஆபரணங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தங்க ஆபரணங்களை கோவையிலிருந்து சென்னைக்கு விற்பனைக்கு கொண்டு செல்வது விசாரணையில் தெரியவந்தது

இதைத்தொடர்ந்து சேலம் ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எப்) அதிகாரிகள் அவரை கைது செய்தனர். மேலும் அந்த ஆபரண தங்கத்தின் மொத்த மதிப்பு 1 கோடியே 78 லட்சத்து 56 ஆயிரத்து 200 ரூபாய் ஆகும். அவர் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்த மதிப்பு ரூபாய் 10 லட்சத்து 70 ஆயிரத்து 852 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது
இதைத் தொடர்ந்து இவர் சேலம் வரி விதிப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

  • sivakumar broke karthi and tamannaah love life தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!