கிலோ மீட்டருக்கு வெறும் 10 பைசா தான்! கோவையில் மின்சார வாகனம் அறிமுகம்!!

9 November 2020, 12:56 pm
Electric Vehicles - Updatenews360
Quick Share

கோவை : கிலோ மீட்டருக்கு ரூ.10 பைசா செலவில் பயணம் செய்யும் வகையில் மின்சார இரு சக்கர வாகனங்களை திருப்பூரை சேர்ந்த நிறுவனம் கோவையில் அறிமுகம் செய்துள்ளது.

திருப்பூரை சேர்ந்த நிறுவனம் சி.கே.மோட்டார்ஸ். இந்த நிறுவனம் மின்சார வாகன தொழிற்சாலையை கோவை தெக்கலூர் பகுதியில் நிறுவி மின்சார வாகன தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வாகனத்தின் அறிமுக நிகழ்ச்சி கோவை சரவணம்பட்டி பகுதியில் இன்று நடைபெற்றது. அப்போது சி.கே மோட்டார்ஸ்-ன் வணிக தலைவர் குணசேகரன் கூறியதாவது:

சரவ்தேச பிரச்சனையான சுற்றுச்சூழல் மாசுபாடுவதை கருத்தில் கொண்டு எங்கள் நிறுவனம் லித்தியம் பேட்டரியால் இயங்கும் ஸ்கூட்டர்கள், மொபட்டுகள் மற்றும் சைக்கிள்களை தயாரித்துள்ளது.

இதுவரை சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து மின்சார வாகனங்களையும் தீவிரமாக ஆராய்ந்து அதில் காணப்படும் அனைத்து தொழில்நுட்ப மற்றும் இயக்கத்தில் உள்ள இன்னல்களை தவிர்த்து இந்த வாகனங்களை தயாரித்துள்ளோம்.

ஒருமுறை சார்ஜ் செய்தால் 120 கிலோ மீட்டார் வரை செல்லும் வாகனம், 80 கிலோ மீட்டர் மற்றும் 60 கிலோ மீட்டர் தொலைவுக்கு செல்லும் வாகனங்களை தயாரித்துள்ளோம். சைக்கிள் ஆரம்பவிலை ரூ.38 ஆயிரம், ஸ்கூட்டர் ரூ.59 ஆயிரத்தில் இருந்து ரூ.93 ஆயிரம் வரை சந்தைப்படுத்த உள்ளோம். இந்த மின்சார வாகனங்கள் மூலம் கிலோ மீட்டருக்கு ரூ.10 பைசாவுக்கும் குறைவான செலவில் பயணம் செய்ய முடியும்.

ஸ்பார்க் இவி என்ற பிரத்யேக ஷோரூம் மூலம் வாகனங்கள் விற்பனை செய்ய உள்ளோம். ஷோரூம் திறப்பு விழா வரும் 11ம் தேதி நடைபெறுகிறது. நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் அன்பரசன் கலந்து கொண்டு ஷோரூமை திறந்து வைக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 38

0

0