ஒரு நிமிடம் பதறிய ஜோதிமணி.. வாக்காளர்களிடம் மன்னிப்பு கேட்டு வாக்கு சேகரிப்பு : கரூரில் பரபரப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
11 April 2024, 4:49 pm

ஒரு நிமிடம் பதறிய ஜோதிமணி.. வாக்காளர்களிடம் மன்னிப்பு கேட்டு வாக்கு சேகரிப்பு : கரூரில் பரபரப்பு!

காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி இன்று கரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, ஆத்தூர் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சாரத்திற்கு செல்ல ஏற்பட்ட கால தாமதம் காரணமாக, சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதி பெண்கள் ஆரத்தி தட்டுடன் காத்துக் கொண்டிருந்தனர்.

இதனை அடுத்து அந்தப் பகுதிக்கு பிரச்சாரத்திற்கு சென்ற ஜோதிமணி பிரச்சார வாகனத்தை விட்டு கீழே இறங்கி, பதறியடித்துக் கொண்டு ஓடிச் சென்று, ஆரத்தி தட்டுடன் காத்துக் கொண்டிருந்த பெண்கள் மற்றும் சிறுமிகளிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

அதனை தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஜோதிமணி தான் பொறுப்பு வகித்த காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!