தள்ளாடியபடி நடந்து வந்து விழுந்த பெண் யானை… தாயிக்கு நேர்ந்த சோகம்… பரிதவிக்கும் குட்டி யானை…!!

Author: Babu Lakshmanan
11 April 2024, 4:20 pm
Quick Share

ஈரோடு ; சத்தியமங்கலம் அருகே வனப்பகுதியில் தள்ளாடியபடி வந்து விழுந்த காட்டு யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வரும் நிலையில், குட்டி யானை பரிதவித்து நின்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சத்தியமங்கலம் வனச்சரகம், பண்ணாரி அருகே இன்று காலை தனது குட்டியுடன் வந்த காட்டு யானை ஒன்று, உடல் நலம் குன்றி நடக்க முடியாமல் திடீரென படுத்துள்ளது.

மேலும் படிக்க: திடீரென 200 மீட்டர் தொலைவுக்கு உள்வாங்கிய கடல்நீர்… தரைதட்டிய படகுகள்… மீனவர்கள் அதிர்ச்சி..!!!

வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்ட வனத்துறை ஊழியர்கள், உடனடியாக உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த சத்தியமங்கலம் வனத்துறையினர், கால்நடை மருத்துவரை அழைத்து சென்று, தற்போது அந்த தாய் யானைக்கு சிகிச்சை அளிக்க துவங்கியுள்ளனர்.

உடல்நலம் குன்றிய அந்த பெண் யானைக்கு, சுமார் 40 முதல் 45 வயது வரை இருக்கலாம் எனவும், அதனுடைய குட்டிக்கு இரண்டு முதல் மூன்று வயது வரை இருக்கலாம் எனவும், எதனால் உடல்நலம் குன்றி அந்த பெண் யானை தற்போது படுத்துள்ளது என்ற விவரம் தெரியவில்லை எனவும், சிகிச்சை அளிக்க தொடங்கி இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க: வைகோவுக்கு ஷாக் கொடுத்த அண்ணாமலை… பாஜகவில் கார்த்திகேயன் கோபாலசாமி… யார் இவர்…?

கடந்த இரு மாதங்களுக்கு முன்பு இதே பண்ணாரி அருகே தனது குட்டியுடன் வந்த தாய் யானை, உடல் நலம் குன்றி படுத்த நிலையில், இரு நாட்களில் அது பரிதாபமாக உயிரிழந்தது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கடம்பூர் மலைப்பகுதியில் இதே போன்று ஒரு பெண் யானை உடல் நலம் குன்றி, திடீரென சரிந்து விழுந்து, ஒரே நாளில் உயிரிழந்தது.

தொடர்ச்சியாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் கடும் வறட்சி நிலவி வரும் காரணத்தாலும், வயோதிகத்தின் காரணமாகவும் யானைகள் தொடர்ச்சியாக இறந்து வருவது வனத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Views: - 210

0

0