திடீரென 200 மீட்டர் தொலைவுக்கு உள்வாங்கிய கடல்நீர்… தரைதட்டிய படகுகள்… மீனவர்கள் அதிர்ச்சி..!!!

Author: Babu Lakshmanan
11 April 2024, 2:38 pm
Quick Share

பாம்பன் பகுதியில் சுமார் 200 மீட்டர் தொலைவிற்கு கடல் நீர் உள்வாங்கியதால் நாட்டுபடகுகள் தரை தட்டி நிற்கின்றன.

ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் தெற்கு வாடி, முந்தல் முனை உள்ளிட்ட கடற்கரை பகுதியில் இருந்து சுமார் 100க்கும் மேற்பட்ட நாட்டு படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க: ஹர்திக் பாண்டியா சகோதரர் திடீர் கைது… மோசடி வழக்கில் ஆக்ஷன்.. அதிர்ச்சியில் IPL அணிகள்!

இந்த நிலையில், திடீரென 200 மீட்டர் தொலைவிற்கு கடல் நீரானது உள் வாங்கியதால் அப்பகுதியில் மீனவர்கள் நிறுத்தப்பட்டிருந்த நாட்டுபடகுகள் தரை தட்டி நிற்கின்றன. மேலும், கடலுக்குள் இருந்த கடல் புற்கள், சிறிய வகை சங்குகள், பவளப்பாறைகள் அனைத்தும் வெளியே தெரிகின்றன.

இது குறித்து மத்திய கடல் மீன் ஆராய்ச்சியாளர்களிடம் நாம் தொடர்பு கொண்டு கேட்ட போது, காலநிலை மாற்றம் காரணமாக கடல் நீரானது உள்வாங்குவதும், சிறிது நேரத்தில் இயல்பு நிலைக்கு திரும்பும் என தெரிவித்துள்ளனர். இதனால், மீனவர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.

கடல் நீரானது இயல்பு நிலைக்கு திரும்பும்போது படகுகளை மீட்க முடியும் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்

Views: - 166

0

0