‘மானநஷ்ட வழக்கு தொடர்வேன்’- பயில்வான் ரங்கநாதனை வெளுத்து வாங்கிய ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி..!

Author: Vignesh
27 September 2022, 5:30 pm
Quick Share

தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பலரைப்பற்றியும் வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் தான் பயில்வான் ரங்கநாதன். பிரபல பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் சமீபகாலமாக தன் யூடுப் சானலில் பல நடிகர் மற்றும் நடிகர்களை பறி பேசி வருகின்றார். அது தமிழ் சினிமா வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றது.

அதற்காக பல சர்ச்சைகளில் சிக்கி வருகின்றார் பயில்வான். இருந்தாலும் அவர் வீடியோ வெளியிடுவதை விடவில்லை. தற்போது வைரமுத்து மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி பற்றி பயில்வான் பேசியதுதான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் வெளியாகவிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் கவிஞர் வைரமுத்துவிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதுபற்றி மணிரத்னத்திடம் கேட்டபோது, வைரமுத்துவுடன் எந்த பிரச்சனையும் இல்லை, வேறு இளம் கவிஞர்களுக்கு வாய்ப்பளிப்பதன் காரணமாகத்தான் வைரமுத்துவை பொன்னியின் செல்வன் படத்தில் பாடல்கள் எழுத அழைக்கவில்லை என்றார்.

இதைப்பற்றி சமீபத்தில் பேசிய பயில்வான் ரங்கநாதன், ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரி ரெய்ஹானாவிடம் வைரமுத்து தவறாக நடந்துகொண்ட காரணத்தால் தான் ஏ.ஆர்.ரஹ்மான் வைரமுத்துவுடன் பணியாற்றமாட்டேன் என கூறியதாக பயில்வான் தெரிவித்தார்.

இந்நிலையில் இதற்கு தற்போது ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி ரெய்ஹானா பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, பயில்வான் ரங்கநாதன் நிதானத்தில் இல்லை என நினைக்கின்றேன். அவர் பேசியதில் எந்த உண்மையும் இல்லை. அவரால் தற்போது பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கண்டிப்பாக அவர் மீது மானநஷ்ட வழக்கை தொடர்வேன். மேலும் வைரமுத்துவுடன் நான் பணியாற்றி இருக்கின்றேன். அவர் என்னிடம் பத்து அடி தள்ளி நின்று தான் பேசுவார். அப்படி இருக்கையில் பயில்வான் ரங்கநாதன் வாய் கூசாமல் இவ்வாறு பேசுவது மிகவும் தவறு என கண்டித்தார் ரெய்ஹானா.

Views: - 900

3

2