கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் ம.நீ.ம.த்தில் ஐக்கியம் : துணைத் தலைவர் பதவியை தூக்கிக் கொடுத்த கமல்…!!!

3 March 2021, 6:58 pm
Kamal - ponraj - updatenews360
Quick Share

சென்னை : அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகராக பணியாற்றிய பொன்ராஜ், கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார்.

சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் 3வது அணியை கட்டமைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. அதேவேளையில், கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைளையும் கமல்ஹாசன் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகராகப் பணியாற்றிய பொன்ராஜ், மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார். அவரை கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வரவேற்றார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- நல்லவர்கள் எங்களின் கட்சிக்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தோம். இப்போது, நாட்டுக்காக உழைத்தவர்கள், நல்லவர்கள், நேர்மையானவர்கள் மக்கள் நீதி மய்யத்தை தேடி வருகின்றனர். தற்போது, அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகராகப் பணியாற்றிய பொன்ராஜ், மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார். அவர் கட்சியின் துணைத் தலைவராக நியமிக்கப்படுகிறார், என அறிவித்தார்.

Views: - 1

0

0