கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையிலிருந்து தப்பியோடியவர் உயிரிழப்பு!

Author:
22 June 2024, 12:37 pm
Quick Share

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது இந்நிலையில் நேற்று கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சேசமுத்திரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் கள்ளச்சாராயம் அருந்தி உடல் நலம் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் நேற்று அருகில் இருந்தவர்கள் நாம் இறந்துவிட்டதால் கண்ணை தோண்டி விடுவார்கள் உடலை அறுத்து விடுவார்கள் என்று சுப்பிரமணியத்தை பயமுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் யாரையோ இருசக்கர வாகனத்தில் வரவழைத்து தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. வீட்டிற்கு சென்று மனைவியிடமும் இறந்துவிட்டால் உடலை அறுத்து கண்ணை எடுத்து விடுவார்கள் என்ற பயத்தில் தப்பித்து வந்து விட்டதாகவும், உடலுக்கு ஒன்றும் இல்லை அதுவே சரியாகிவிடும் என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை சுப்பிரமணி வாந்தி,மயக்கம்,வயிற்று வலி போன்றவை இருப்பதாக கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் 108 ஐ வரவழைத்து சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்த போது சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதைக் கேட்டு உறவினர்கள் கதறி அழுதனர். சுப்பிரமணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது. மேலும் விழிப்புணர்வு இல்லாமல் இது போல் தப்பி ஓடியதால் தான் இவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்போது இறப்பு எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.

Views: - 123

0

0