இப்படி சொன்னது ஒரு குத்தமா?.. தாய், தம்பியை கழுத்தை அறுத்து கொடூரக் கொலை செய்த இளைஞர்..!

Author: Vignesh
22 June 2024, 12:42 pm
arrested
Quick Share

சென்னை திருவொற்றியூர் திருநகர் 1வது தெருவை சேர்ந்த பத்மாவுக்கு இரண்டு மகன்கள். நித்தேஷ் வயது 20 சஞ்சய் வயது 14 இரண்டு மகன்கள் இருந்த நிலையில், பத்மாவின் மூத்த மகன் நித்தேஷ் தனது தாய் பத்மா மற்றும் தம்பி சஞ்சய் ஆகிய இருவரையும் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார்.

பின்னர், அவர்கள் இருவரின் சடலத்தையும் கோணிப்பையில் கட்டி மறைத்து வைத்த பின்னர் உறவினர்களுக்கு போன் மூலமாக மெசேஜ் செய்து தகவல் அனுப்பினார். அவர் உறவினர்களுக்கு, அனுப்பிய மெசேஜில் தாய், தம்பியை கொலை செய்ததாகவும், தன்னை தேட வேண்டாம் தானும் தற்கொலை செய்யப் போவதாகவும் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, உறவினர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவொற்றியூர் போலீசார் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து, வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பி சென்ற நித்தேஷ் என்பவரை தேடி வருகின்றனர். முன்னதாக, கல்லூரி படிப்பில் 14 அரியர் இருந்ததை முடிக்க சொல்லி கண்டித்ததால் தாய் மற்றும் தம்பியை நித்தேஷ் கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனிடையே, திருவொற்றியூர் கடற்கரையில் மறைந்திருந்த நித்தேஷை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Views: - 218

0

1