உத்தரவு கேட்டு உதவிக்குப் போவதில்லை ரத்தத்தில் உண்டே உதவுமனம் : வழக்கம் போல டுவிட் போட்ட கமல்..!!

25 November 2020, 12:15 pm
Quick Share

சென்னை : நிவர் புயல் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ள மக்கள் நீதி மய்யத்தினருக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்தம், தற்போது படிப்படியாக வலுவடைந்துள்ளது. நிவர் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் அருகே இன்று நள்ளிரவு கரையை கடக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கத்தினால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும், சில மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, சென்னையில் தொடர் கனமழை பெய்து வருகிறது. எனவே, புயல் பாதிப்புக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மற்றும் பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நிவர் புயல் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ள மக்கள் நீதி மய்யத்தினருக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “உத்தரவு கேட்டு உதவிக்குப் போவதில்லை ரத்தத்தில் உண்டே உதவுமனம் – எத்தனையோ பத்தாண்டு காலமாய் நற்பணிகள் செய்துவரும் வித்தன்றோ எந்தன் படை! பேரிடர் உதவிப் பணியில் இறங்கியிருக்கும் மக்கள் நீதி மய்யப் படையணிக்கு வாழ்த்துகள்,” எனத் தெரிவித்துள்ளார்.

Views: - 0

0

0