மகாலட்சுமி தாமரையில் அமர்ந்து வருவாள், டார்ச் லைட்டில் இல்லை : ஸ்மிருதி இராணி பளார்!!

Author: Udayachandran RadhaKrishnan
27 March 2021, 4:45 pm
Smrithi Ask -Updatenews360
Quick Share

கோவை : மக்கள் பிரச்சனை, ஆட்சி நிர்வாகம், கொள்கை முடிவுகள் குறித்து வானதியுடன், கமலஹாசன் விவாதித்த தயாரா என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி சவால் விடுத்துள்ளார்.

கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி பரப்ப்புரை மேற்கொண்டார். பின்னர் வடகோவை பகுதியில் உள்ள குஜராத் சாமாஜில் நடந்த ஹோலி கொண்டாத்திற்கு சென்ற அவர் குஜராத் மக்களுடன் நடனமாடினார்.

பின்னர் குஜராத் மக்கள் முன்னிலை பேசி வானதி சீனிவாசனுக்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: தற்போது டார்ச் லைட்டுடன் சுற்றி வருபவர் வானதியுடன் மக்கள் பிரச்சனையை புரிந்து கொள்ளுதல், அதற்கான தீர்வு வழங்குதல், ஆட்சி நிர்வாகம், அரசு கொள்கை முடிவுகள் குறித்து விவாதிக்க வேண்டும். அதை வைத்தே பால், தண்ணீர் இரண்டையும் எளிதாக பிரித்து விடலாம்.

வாக்களிப்பது நமது கடமை மட்டுமல்ல வரும் ஏப்ரல் 6 தேதி வாக்களிப்பதை ஒரு புனித செயலாக எண்ணி பாஜக விற்கு வாக்களிக்க வேண்டும். அதுவே ஏழை மக்களின் பொருளாதாரம் வளர்ச்சியை உயர்த்தும், வீட்டிற்கு வரும் மகா லட்சுமி தாமரையில் அமர்ந்து தான் வரும், டார்ச் லைட்டில் வராது.

கொரோனா காலத்தில் மத்திய அரசு மக்களுக்கு சிறப்பான பணிகளை ஆற்றியுள்ளது. இந்த கொரோனா காலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால் என்ன நிலைமை ஆகியிருக்கும் என்பதை நினைத்து பார்க்க வேண்டும்.

80 கோடி மக்களுக்கு இலவச ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டது. 26 கோடி மகளிருக்கு 3 ஆயிரம் கோடி பணம் அவர்களது வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்கு ஒரு ரூபாய் அரசு செலவு செய்தால், அதில் 10 பைசா மட்டுமே மக்களுக்கு செல்கிறது என காங்கிரஸ் தலைவரே கூறி உள்ளார்.

மோடி ஆட்சியில் மத்திய அரசால் 10 கோடி கழிப்பறைகளும், அதில் தமிழகத்தில் மட்டும் 90 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது. இதன் முக்கியதுவத்தை தமிழகத்தில் உள்ள ஏழை பெண்கள் மட்டுமே உணர்வார்கள்.

2 ஆண்டுகளில் 10 கோடி விவசாயிகளுக்கு ஒரு லட்சம் கோடி நிதி வங்கிகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இதில் 50 லட்சம் விவசாயிகள் தமிழக விவசாயிகள். ஏப்ரல் 6 தேதி வானதி சீனிவாசனுக்கு வழங்கும் ஒவ்வொரு ஓட்டும் பாஜகவிற்கும், மோடிக்கு வழங்ககூடிய ஓட்டாக பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Views: - 191

0

0