‘எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல’ : வீட்டு வாசலில் வாசகம்… வாக்காளர்களுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்..!!

7 March 2021, 2:39 pm
Kamal Sellur Raju-Updatenews360
Quick Share

சென்னை : எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல என்று வாசகத்தை எழுதிய அட்டையை வைக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் 6ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வரும் 12ம் தேதி தொடங்குகிறது. தேர்தல் முடிவுகள் மே 2-ம் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. இதனிடையே, வேட்புமனு தாக்கலுக்கு முன்னதாக தொகுதி பங்கீட்டை முடித்து விட அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்த நிலையில், எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல என எழுதி வாசலில் மாட்டுங்கள் என்று பொதுமக்கள்ளுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “மானமிகு தமிழர்க்கோர் விண்ணப்பம். ஓர் அட்டையில் “எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல” என எழுதி வாசலில் மாட்டுங்கள். நாய் நரிகள் நம்மை அணுகாதிருக்கட்டும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

Views: - 13

0

0