கமல்ஹாசன் கார் மீது தாக்குதல் நடத்திய மது போதை வாலிபர்: நையப்புடைத்த மக்கள் நீதி மையத்தின் தொண்டர்கள்

Author: Udhayakumar Raman
14 March 2021, 10:54 pm
Quick Share

காஞ்சிபுரம்: மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் பரப்புரை முடித்துவிட்டு காரில் செல்லும்போது அவர்கள் சென்ற கார் மீது தாக்குதல் நடத்திய மது போதை வாலிபரை மக்கள் நீதி மையத்தின் தொண்டர்கள் நையப் புடைத்து காவல்துறையினரிம் ஒப்படைத்தனர்.

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது .அதனை முன்னிட்டு அனைத்து கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிரமாக பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் மக்கள் நீதி மையத்தின் வேட்பாளர்கள் 4 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடுகின்றனர் என கமல்ஹாசன் நேற்று அறிவித்தார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு முதல்கட்ட பிரச்சாரத்தை காஞ்சிபுரத்தில் முடித்துவிட்டு இரண்டாம் கட்டமாக இன்று ஹெலிகாப்டர் மூலம் ஏனாத்தூர் பகுதியில் உள்ள சங்கரா பல்கலைக்கழகத்துக்கு வந்து இறங்கி அங்கிருந்து கார் மூலம் காஞ்சிபுரத்தில் அதிக நெசவாளர் மக்கள்கள் உள்ள பகுதியான பிள்ளையார்பாளையம் பகுதிக்கு சென்று பரப்புரையை மேற்கொண்டார்.

பின்னர் பரப்புரையை முடித்துவிட்டு காந்தி சாலையில் அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடைக்கு வந்து 4 சட்டமன்ற வேட்பாளர்களையும் மக்களுக்கு அறிமுகப்படுத்திவிட்டு பேசினார். கமல்ஹாசன் பேசும்போது ஒரு வாலிபர் தேவை இல்லாமல் அவ்வப்போது அனாவசியமாக சப்தம்ம் போட்டு பேசியதைக் கண்ட கமல்ஹாசன் மிகவும் நாசுக்காக அந்த வாலிபரை கிண்டலடிக்கும் துணியில் அவர் பேசவில்லை, அவர் சாப்பிட்ட மதுபானம் பேசுகின்றது என கூறினார். கூட்டம் முடித்துவிட்டு கமல்ஹாசன் அவர்கள் காரில் ஏறி கிளம்பும்போது மது போதையில் இருந்த அந்த வாலிபர் கமல்ஹாசன் சென்ற கொண்டிருந்த காரை மறித்து முன்பக்க கண்ணாடியை கையால் குத்தி உடைத்தார்.

இதைக் கண்ட மக்கள் நீதி மையத்தின் தொண்டர்கள் அந்த வாலிபரை பிடித்து நையப் புடைத்தனர். சம்பவத்தை பார்த்து ஓடி வந்த சிவகாஞ்சி காவல்துறையினர் மக்கள் நீதி மைய்ய தொண்டர்களிடம் இருந்து அந்த வாலிபரை மீட்டு விசாரணைக்கு காவல் நிலையம் அழைத்து சென்றனர். உலகநாயகன் என ரசிகர்களால் அழைக்கப்படும் கமல்ஹாசனின் கார் கண்ணாடியை உடைத்த செயல் இப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.

Views: - 78

0

0