மயிலையில் மையம் கொண்டுள்ளதா மக்கள் நீதி மய்யம்! தேர்தல் “சர்வே“!!

4 November 2020, 8:20 pm
MNM- Updatenews360
Quick Share

தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட போவதாக தகவல் கசிந்துள்ளது.

தமிகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஆயத்தமாக வருகின்றன. இதோ அரசியலுக்கு வருகிறார் என நடிகர் ரஜினி குறித்து செய்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி படுவேகத்தில் ஆரம்ப பணிகளை துவங்கியுள்ளது.

இதுதான் கமலின் பிரச்சார வாகனம்.. இதில் ஆச்சர்யம் இருக்கு.. சஸ்பென்ஸ்  கண்டுபிடிங்க! | find the suspense from campaign vehicle of Kamal Haasan's  makkal neethi maiyam party - Tamil Oneindia

சமீபத்தில் மநீமவின் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. மிகவும் பிரம்மாண்டமாக நடந்த கூட்டத்தில் பிரச்சார வாகனமும் அறிமுகம் செய்யப்பட்து. இந்த நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Kamal Haasan's cadre to blow the whistle | Deccan Herald

மயிலாப்பூரில் களமிறங்க அதிக செல்வாக்கு உள்ளதாக கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் கமல்ஹாசனுக்கு சமுதாய வாக்குகள் அங்கு அதிகம் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. உண்மையாக இது உறுதிப்படுத்தப்பட்ட தகவல் என்று தெரியாவிட்டாலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Kamal Haasan saves the life during his MNM campaign -

மயிலாப்பூரில் கமல் களமிறங்க இதுதான் முக்கிய காரணம் என அரசியல் நோக்கர்கள் இரண்டு காரணங்களை கூறுகின்றனர். ஒன்று சமுதாய வாக்குகளும், மற்றொன்று நகர்புறங்களில் அதிக வாக்குகள் கிடைக்கும் என்பதால்தான் என தெரிவிக்கின்றனர். கடந்த தேர்தலில் ம.நீ.ம கிராமப்புறங்களைவிட நகர்ப்புறங்களில் அதிக வாக்குகளை வென்றனர்.

Kamal Haasan joins protest against Sterlite plant in Thoothukudi

மேலும் சென்னையில் கமல் களம் கண்டால் எளிதாக மக்களை சென்றடையலாம் என்றும், இதையெல்லாம் கணக்கு வைத்தான் மயிலாப்பூர் தொகுதியை கமல் தேர்ந்தெடுத்தள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது அதிகாரப்பூர்வமான தகவலும் இல்லை,.

ஒரு வேளை, கமல் தனது சொந்த ஊரான ராமநாதபுரத்தில் போட்டியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அவரின் சொந்த ஊர் ராமநாதபுரத்தில் உள்ள பரமக்குடிதான். அதுமட்டுமல்லாமல் கட்சியை ஆரம்பித்ததும் ராமநாதபுரத்தில்தான். இதன் காரணமாக ராமநாதபுரத்தல் அவர் களமிறங்கினால், வெற்றி நிச்சயம் என்பதில் சந்தேகம் இல்லை.

Makkal Needhi Maiam 2019 My Remaining Life is For People Kamal Haasan

ஆனால் மயிலாப்பூர் தொகுதியில் அதிமுக இதுவரை 6 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுகவும் 5 முறை வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 3 முறையும், பாஜக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில், மநீம மயிலாப்பூரில் களம் கண்டு வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Views: - 78

0

0