குடிபோதையில் அம்மாவுடன் சண்டை போட்ட அண்ணன்… கோபத்தில் அடித்தே கொன்ற தம்பி ; கதறி அழுத தாய்…!!

Author: Babu Lakshmanan
13 March 2023, 12:02 pm

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அருகே அம்மாவுடன் சண்டை போட்ட அண்ணனை தம்பி அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் அருகே திம்மையன்பேட்டை பகுதி கீழத்தெருவில் வசித்து வருபவர் தெய்வயானை (எ) வள்ளியம்மாள். இவருக்கு சரவணன் (51) மற்றும் வடிவேல் (40) என்கிற இரண்டு மகன்கள் உள்ளனர். சகோதரர்கள் இருவரும் பட்டு சேலை நெசவு தொழில் செய்து வருகிறார்கள்.

இதில் அண்ணன் சரவணனுக்கு திருமணம் ஆகி, மனைவி ஐந்து வருடங்களுக்கு முன்பு பிரிந்து சென்ற நிலையில், குடிபோதைக்கு அடிமையாகியுள்ளார். தாய் மற்றும் இரு சகோதரர்களும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில், இன்று காலை அண்ணன் சரவணன் தனது அம்மாவுடன் தகராறு செய்து கொண்டு உள்ளதை கண்ட தம்பி வடிவேலு அண்ணனை கண்டித்துள்ளார்.

இதனால், ஆவேசம் அடைந்த சரவணன் தம்பி வடிவேலுவின் கையை கடித்துள்ளார். எதிர்பாராத இந்த தாக்குதலில் ஆவேசம் அடைந்த வடிவேலு அருகில் இருந்த கட்டையை எடுத்து அண்ணன் சரவணனை தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் சரவணன் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.

எதிர்பாராத இந்த சண்டையினால் மகன் சரவணன் உயிர் இழந்ததைக் கண்டு தாய் வள்ளியம்மாள் கதறி அழுதார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் அளித்ததன் பேரில், வாலாஜாபாத் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை செய்து வடிவேலுவை கைது செய்து சடலத்தை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  • lokesh kanagaraj introduce as a hero in upcoming film லோகேஷ் கனகராஜ்ஜுக்கும் அந்த விபரீத ஆசை வந்திடுச்சா? விரைவில் எடுக்கப்போகும் புதிய அவதாரம்!