பழம் பறித்து தருகிறேன் என கூறி பள்ளி மாணவியிடம் ‘சில்மிஷம்‘ : இளைஞர் கைது!!
25 September 2020, 11:50 amகாஞ்சிபுரம் : ஓரகடம் அருகே 15 வயது பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஓரகடம் அடுத்த வட்டம்பாக்கம் கிராமத்தில் பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் செல்வம். இவரது மகன் சாந்தகுமார் ( வயது 28 ). அதே பகுதியில் விவசாயம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் 15 வயது பள்ளி சிறுமியை தர்பூசணி, வெள்ளரி பழம் பறித்து தருகின்றேன் என கூறி அழைத்துச் சென்று மிரட்டி கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுபற்றி வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என எச்சரித்து அனுப்பி உள்ளார்.
இதுகுறித்து அச்சிறுமி பெற்றோர்களிடம் கூறியதை தொடர்ந்து சிறுமியின் தந்தை, சாந்தகுமார் மீது நடவடிக்கை எடுக்க ஒரகடம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் ஓரகடம் காவல் ஆய்வாளர் அஞ்சலா லட்சுமி, சாந்தகுமாரை கைது செய்து போக்சோ சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.