ஒரு ஸ்கூல் குழந்தை போல.. ஆளுநரை கடுமையாக விமர்சித்த கனிமொழி!

Author: Hariharasudhan
7 January 2025, 1:28 pm

ஆளுநர் வீட்டில் இருந்து லீவ் லெட்டர் அனுப்பினால், முதலமைச்சர் போனால் போகிறது என விட்டுவிடுவார் என கனிமொழி எம்பி கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னை: தமிழ்நாட்டையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்துவதாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து மாநிலம் முழுவதும் இன்று திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. அந்த வகையில், மாவட்ட தலைநகரங்களில் ஆளுநரைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, சென்னை சைதாப்பேட்டையில் ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இதில் பேசிய கனிமொழி எம்பி, “ஆளுநர் வீட்டில் இருந்து லீவ் லெட்டர் அனுப்பினால், முதலமைச்சர் போனால் போகிறது என விட்டுவிடுவார். எதிரிகளை புறமுதுகிட்டு ஓட வைக்கக்கூடிய இயக்கம் திமுக. இங்கு தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் தான் முதலில் பாடப்படும், இதுதான் எங்களுடைய சட்டம்.

Kanimozhi about RN Ravi

நீங்கள் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து விட்டு ஓடி வந்தவர்கள், உங்களுக்கும் சுதந்திரப் போராட்டத்திற்கு என்ன சம்பந்தம்? தேசிய கீதத்தைக் காப்பாற்ற உங்களை விட முதலமைச்சருக்குத் தெரியும். நீங்கள் பாடம் எடுக்கக் கூடிய இடத்தில் நாங்கள் இல்லை.

இதையும் படிங்க: அவருக்கு அம்மாவா நடிக்கும் போது கூட டபுள் மீனிங் பேசுனாரு.. கமல்ஹாசன் குறித்து பிரபல நடிகை வீடியோ!

நீங்கள் அவமானப்படுத்திக் கொண்டே இருந்தால், நாங்கள் அமைதியாகவே இருப்போம் என நினைக்காதீர்கள், கடைசியில் தமிழகத்தில் பாஜக ஒரு ஓட்டு கூட வாங்க முடியாத நிலை வரும் என்பதால் தான், ஆளுநரை திரும்பப் பெறக் கூறுகிறோம். மக்களின் சுயமரியாதைக்காக போராடக்கூடிய இயக்கம் திமுக.

உங்களை நாங்கள் தொடர்ந்து எதிர்ப்போம், திராவிடம் என்று சொன்னாலே தூக்கத்தில் வரும் கனவில்கூட அவர்களுக்கு பயம் வரும். மூன்றாவது முறை ஆளுநர் வெளியேறி இருக்கிறார். இந்த மாநிலத்தில் மட்டும் ஏன் இதே ஆளுநரை வைத்துள்ளீர்கள்? தமிழகத்தை மதிக்காவிடில் ஓடஓட விரட்டப்படுவீர்கள். அந்த நாள் வெகுதொலைவில் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!