மாணவி தற்கொலை எதிரொலி : நீட் தேர்வை ரத்து செய்ய கனிமொழி வலியுறுத்தல்!!

19 August 2020, 5:06 pm
Net Exam Kanimozhi- Updatenews360
Quick Share

கோவை : கொரோனா காரணமாக இந்த ஆண்டாவது நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என திமுக நாடளுமன்ற உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

கோவை ஆர்.எஸ்.புரம் வெங்கடசாமி ரோட்டை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். அரசு ஊழியர். இவரது மகள் சுபஸ்ரீ (வயது 19). இவர் நேற்று வீட்டில் இருந்த போது அவருடைய அறையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவருடைய பெற்றோர் கதறித்துடித்தனர். இது குறித்து போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவருடைய உடலை கைப்பற்றி விசாரித்தனர்.

விசாரணையில், சுபஸ்ரீ பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவையில் உள்ள அகாடமியில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்ததுள்ளார். கடந்த முறை பி.டி.எஸ். படிப்பில் சேர நீட் தேர்வு எழுதினார். அதில் அவர் தோல்வி அடைந்தார். இதனைத்தொடர்ந்து எம்.பி.பி.எஸ்-சில் சேர மீண்டும் நீட் தேர்வுக்கு தயாரானார்.

இந்நிலையில், அடுத்த மாதம் நீட் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் இந்த முறையும் தேர்ச்சி பெறுவோமா? மாட்டோமோ என அவர் மன குழப்பத்தில் இருந்துள்ளார். இதனால் ஏற்பட்ட பயம் காரணமாக மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள எம்.பி. கனிமொழி, நீட் தேர்வால் மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்த சம்பவம் வேதனை அளிக்கிறது. கொரோனா காரணமாக இந்த ஆண்டாவது மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Views: - 29

0

0