கலைஞர் கருணாநிதியின் மனைவிக்கு வெளிநாட்டில் சிகிச்சை : ராஜாத்தி அம்மாளுடன் கனிமொழி ஜெர்மனி பயணம்!!

Author: Udayachandran RadhaKrishnan
26 August 2022, 10:16 pm

சிகிச்சைக்காக ஜெர்மனி செல்லும் ராஜாத்தி அம்மாள் 2 வாரங்கள் தங்கி இருந்து சிகிச்சை பெற்று திரும்புவார் என கூறப்படுகிறது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மனைவியும் தூத்துக்குடி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் தாயாருமான ராஜாத்தி அம்மாள் வயது முதிர்வு காரணமாக அஜீரண பாதிப்பு உள்பட உடல் நல குறைவினால் பாதிக்கப்பட்டு உள்ளார்.

செரிமான மண்டல பாதிப்பால் அவதிப்பட்டு சென்னையில் பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் ஜெர்மன் நாட்டில் மருத்துவமனை ஒன்றில் உயர் சிகிச்சை பெறுவதற்காக சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து ஜெர்மனிக்கு ராஜாத்தி அம்மாள் விமானம் மூலமாக புறப்பட்டு சென்றார்.

அவருடன் கனிமொழி எம்பி மற்றும் குடும்ப உறுப்பினர்களும் சென்றனர். அங்கு 2 வாரங்கள் தங்கி இருந்து சிகிச்சை பெற்று திரும்புவார் என கூறப்படுகிறது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!