ஜீப் மீது பைக் மோதி விபத்து… 2 கி.மீ., இழுத்துச் செல்லப்பட்ட பள்ளி மாணவன் தீயில் கருகி பலி ; நெஞ்சை பதற வைத்த காட்சி..!!

Author: Babu Lakshmanan
12 February 2024, 9:56 am

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே பைக் மீது பொலீரோ ஜீப் மோதிய விபத்தில் ஜீப் அடியில் சிக்கிய பள்ளி மாணவனை ஜீப் இழுத்து சென்றதில் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். நெஞ்சை பதற வைக்கும் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈத்தாமொழியை தெற்குபால் கிணற்றான் விளையை சேர்ந்தவர் கோபி (39). இவர் ஈத்தாமொழி மற்றும் கன்னியாகுமரியில் பெயிண்ட் கடை நடத்தி வருகிறார். நேற்று விடுமுறை என்பதால் மனைவி லேகா (30) மற்றும் குழந்தைகளை அழைத்து கொண்டு மதியம் வீட்டிலிருந்து சங்குதுறைபீச்சுக்கு புறப்பட்டனர். கார் ஈத்தாமொழி செம்பொன்கரை பகுதியில் வந்த போது பொலீரோ ஜீப் முன்னால் சென்ற பைக் மீது பயங்கரமாக மோதியுள்ளது.

மோதிய வேகத்தில் ஜீப் முன் பகுதியில் பைக் சிக்கியிருப்பதை அறியாத கோபி வேகமாக ஓட்டியுள்ளார். இதனை நேரில் பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் ஜீப்பை நிறுத்துமாறு கத்தி கூச்சலிட்டனர். மேலும், இளைஞர்கள் ஜீப்பை நிறுத்துமாறு பைக்கில் வேகமாக பின்தொடர்ந்தனர். ஆனால் அதற்குள் ஜீப்பானது சங்குத்துறை பீச்சிற்கு வந்தது. அப்போது, முன்பகுதி திடீரென தீ பிடித்து எரிந்தது .இதனால் பதறிய கோபி மற்றும் மனைவி, குழந்தைகள் ஜீப்பில் இருந்து தப்பி ஓடினர். இதற்கு இடையே ஜீப் முற்றிலுமாக எரிந்து சாம்பலானது.

இது பற்றி தகவல் அறிந்த போலீசார், நாகர்கோவில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார்கள். ஜீப்பில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து அனைத்தனர். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில்ஜீப்பும் பைக்கும் மோதிய வேகத்தில் சிறுவன், ஜீப்பின் அடியில் சிக்கியுள்ளான். தரதர என சுமார் மூன்று கிலோமீட்டர் இழுத்துச் சென்றுள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் ஜீப்பை நிறுத்துமாறு கூச்சலிட்டனர். அதற்குள் ஜீப்பானது சங்குத்துறை பீச்சிற்கு வந்துவிட்டது.தீப்பிடித்து எரிந்ததை கண்டு ஜுப்பில் இருந்த அனைவரும் கீழே இறங்கினர். அதற்குள் ஜீப்பும், அடியில் சிக்கிய சிறுவனும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்.

மேலும், ஜீப்பின் முன் பகுதியில் உடல் சிக்கியிருந்த நிலையில் தீ பிடித்ததால் உடல் கருகி கிடந்தது. பொதுமக்கள் உதவியுடன் ஜுப்பில் சிக்கி இருந்த சிறுவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சுசீந்திரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 15 வயது சிறுவன் ஜீப்மோதி சாலையில் தரதர என இழுத்து செல்லப்பட்டு கொடூரமாக உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பலியான சிறுவன் தெற்கு சூரங்குடி பள்ளி தெருவை சேர்ந்த அபுபக்கர் சித்திக் என்பவரது மகன் அஜாஸ் (15) சுண்டபற்றிவிளை பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜீப்பின் அடியில் சிக்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!