கனியாமூர் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் : சிபிசிஐடி பிடியில் சிக்கும் தனியார் பள்ளி நிர்வாகிகள்? நீதிமன்றத்தில் அவசர மனு!!

Author: Udayachandran RadhaKrishnan
26 July 2022, 2:20 pm
School Admin - Updatenews360
Quick Share

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மாணவி உயிரிழப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோரை சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்ட கனியாமூர் ஸ்ரீ சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 13ம் தேதி ஸ்ரீமதி என்ற பிளஸ்டூ மாணவி மர்மமாக உயிரிழந்தது தொடர்பாக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு கலவரமாக மாறி பள்ளிகள் சூறையாடப்பட்டு மாணவியின் உடல் நீதிமன்ற உத்தரவின் பேரில் அடக்கம் செய்யப்பட்டன

இந்த மாணவியின் உயிரிழப்பு தொடர்பாக விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. ஸ்ரீ சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி தாளாளர் ரவிக்குமார், பள்ளி செயலாளர் சாந்தி ,பள்ளியின் முதல்வர் சிவசங்கரன், பள்ளியின் வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, பள்ளியின் கணித ஆசிரியை கீர்த்திகா, ஆகியோர்கள் கைது செய்யப்பட்டு கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சிபிசிஐடி போலீசார் மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார் செயலாளர் சாந்தி முதல்வர் சிவசங்கரன் உள்ளிட்ட ஆசிரியர்கள் உட்ப்பட 5 பேரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

Views: - 486

0

0