குளிர்பானம் வாங்கி குடித்த பள்ளி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்… பெற்றோர்கள் அச்சம்..!!

Author: Babu Lakshmanan
5 August 2022, 6:13 pm

காஞ்சிபுரம் : பள்ளியின் வெளியே விற்க்கும் குளிர்பானத்தை வாங்கி அருந்திய 6 மாணவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் நகரில் இயங்கி வரும் பிரபல ஆண்டர்சன் ஆடவர் மேல்நிலை பள்ளியின் வெளியே தரையில் அமர்ந்து தினமும் மிட்டாய் மற்றும் குளிர்பானங்களை மூதாட்டி ஒருவர் விற்பனை செய்து வருகிறார். அவரிடம் ரஸ்னா குளிர்பான பாக்கெட் வாங்கி தண்ணீர் கலந்து குடித்த 6 மாணவர்களில் ஒருவருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.

மற்ற 5 மாணவர்களுக்கும் லேசான மயக்கம் ஏற்பட்டதால் அவர்கள் 6 பேரையும் மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டனர். ஒரு மாணவருக்கு மட்டும் வாந்தி மயக்கம் கூடுதலாக இருந்ததால், படுக்கையில் அனுமதிக்கப்பட்டு, குளோக்கோஸ் ஏற்றப்பட்டது. மற்ற 5 மாணவர்களுக்கும் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது அவர்கள் ஐந்து பேரும் நார்மலாக உள்ளதாக தெரிவித்தனர்.

வெளியே விற்பனை செய்யும் குளிப்பானத்தை வாங்கி அருந்திய 6 மாணவர்கள் பாதிக்கப்பட்டதால் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?