செல்போன் வாங்கி கொடுக்காததால் விரக்தி : 10ம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை

Author: Babu Lakshmanan
6 November 2021, 4:39 pm
10th Student Suicide- Updatenews360
Quick Share

கன்னியாகுமரி: குமரி அருகே உடன் பிறந்த சகோதரிக்கு செல்போன் வாங்கி கொடுத்துவிட்டு, தனக்கு செல்போன் வாங்கித் தராததால் ஏற்பட்ட விரக்தியில் பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குமரி மாவட்டம் புதுக்கடை அருகே பூட்டேற்றி ,கொழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் மகள் வீணா (15). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறார். வீணாவின் அக்கா ஆரதி என்பவர் லேப் டெக்னீசியன் படித்து வருகிறார். அவருக்கு தந்தை ஐயப்பன் செல்போன் வாங்கி கொடுத்துள்ளார். இதனையடுத்து பள்ளி மாணவி வீணா தனக்கு செல்போன் வாங்கித் தருமாறு தனது தந்தையிடம் கேட்டுள்ளார்.

பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பின்னர் செல்போன் வாங்கித் தருவதாக பெற்றோர்கள் கூறியுள்ளார். இதனால் மனம் உடைந்த நிலையில், காணப்பட்ட வீணா வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர்கள் வீணாவை கருங்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை அனுமதித்துள்ளனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக நேற்று குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 546

0

0