பேருந்தில் இரு பெண்களிடம் 15 பவுன் நகை பறிப்பு : பலே ஆசாமிகளுக்கு போலீசார் வலைவீச்சு..!!

21 July 2021, 11:34 am
chain snatching 1 - updatenews360
Quick Share

கன்னியாகுமரி : நாகர்கோவில் ஒரே நாளில் இரண்டு பெண்களிடம் 15 பவுன் நகை பறிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகர்கோவில் வடசேரி ஒன்பதாவது தெருவைச் சேர்ந்தவர் வேலப்பன் இவர் மனைவி சாவித்திரி (58). இவர் நேற்று மதியம் தாழக்குடியில் உள்ள அவ்வையார் அம்மன் கோவிலுக்கு செல்வதற்காக பேருந்தில் ஏறி சென்றார். ஒழுகினசேரி என்ற இடத்தில் பேருந்து செல்லும் போது அவரது கழுத்தில் கிடந்த ஐந்து பவுன் தங்கச்சங்கிலியை யாரோ மர்ம ஆசாமிகள் பறித்தது தெரியவந்தது.

இதுகுறித்து சாவித்திரி கோட்டார் போலீசில் புகார் செய்தார். இதேப்போன்று வில்லுக்குறி சேர்ந்த தாணுமாலயன் என்பவர் மனைவி பகவதி அம்மன் (63). இவர் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு சென்று விட்டு பேருந்தில் ஏறி நாகர்கோவில் பால்பண்ணை சந்திப்பில் வந்து இறங்கினார். அப்போது, அவர் கழுத்தில் கிடந்த 10 பவுன் தங்க சங்கிலியை காணவில்லை. யாரோ மர்ம ஆசாமிகள் ஓடும் பேருந்தில் திருடியது தெரியவந்தது. இந்த சம்பவங்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Views: - 196

0

0

Leave a Reply