குமரியில் 4 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் : நாளொன்றுக்கு 400 பேருக்கு தடுப்பூசி போட முடிவு..!!!

16 January 2021, 12:13 pm
Kumari vaccine - updatenews360
Quick Share

கன்னியாகுமரி : குமரி மாவட்டத்தில் 4 இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தொடங்கி வைத்தார்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்து போடும் பணி இன்று தொடங்கியுள்ளது. இதற்காக இரண்டு கட்டங்களாக ஒத்திகை நடைபெற்று முடிந்தது.

குமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பத்மநாபபுரம் அரசு தலைமையிட மருத்துவமனை, செண்பகராமன்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வட்டவிளை அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் டாக்டர் ஜெயசேகரன் மருத்துவமனை ஆகிய 5 இடங்களில் காரோனா தடுப்பூசி திட்டத்திற்கான ஒத்திகை நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக குமரி மாவட்டத்திற்கு முதல்கட்டமாக 22 ஆயிரத்து 600 தடுப்பூசி மருந்து வழங்கப்பட்டது. இந்த மருந்துகள் அனைத்தும் கிருஷ்ணன் கோவிலில் உள்ள தடுப்பூசி மருந்து குடோனில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நான்கு கட்டமாக தடுப்பூசி பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.

அதன்படி, இன்று காலை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த முகாமில், மாவட்ட கலெக்டர் அரவிந்த் முதற்கட்ட தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக அனைத்து மருத்துவ மற்றும் சுகாதார பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு 100 பேர் வீதம் முதற்கட்டமாக ஒரு நாளைக்கு 400 பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

இரண்டாம் கட்டமாக கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் முன்கள பணியாளர்களுக்கும், மூன்றாம் கட்டமாக 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் நீண்ட கால நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், நான்காம் கட்டமாக அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தடுப்பூசி திட்ட பணிக்கு தேவையான மருத்துவ பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களின் விவரங்களை கோவின் என்ற செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பயனாளிகள் தடுப்பூசிகளை எங்கே எந்த இடத்தில் பெறவேண்டும் என்ற விவரங்கள் அவர்களின் கைபேசி செயலி மூலமாக குறுந்தகவல் சென்றடையும். மேலும் அவர்கள் தடுப்பூசி பெற்ற பின்னர் தடுப்பூசி பெற்ற விவரங்களை கோவிலில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

Views: - 7

0

0