‘நீ வேணும்னா சண்டைக்கு வாடா’ : குடிபோதையில் வடிவேல் பாணியில் திமுக கவுன்சிலர் ரகளை..!!

18 November 2020, 11:50 am
kumari fight - updatenews360
Quick Share

கன்னியாகுமரி : கன்னியாகுமரி அருகே குடிபோதையில் திமுக கவுன்சிலர் ஒருவர், வலுக்கட்டாயமாக சண்டைக்கு வருமாறு கூறி ரகளையில் ஈடுபட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே அந்தரபுரம் ஊரைச் சேர்ந்தவர் பூதலிங்கம் பிள்ளை. திமுகவை சேர்ந்த இவர் தெரிசனங்கோப்பு ஒன்றிய கவுன்சிலராக இருந்து வருகிறார். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனக்கு சொந்தமான கடையை விற்க முயன்ற அதிமுக பிரமுகரை சரமாரியாக தாக்கினார். இதையடுத்து, காவல்துறையினர் விடுத்த எச்சரிக்கையினால் தற்போது சற்று இருக்கும் இடம் தெரியாமல் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, அதிமுக பிரமுகரை தாக்கிய விவகாரத்தில் திமுக கவுன்சிலர் பூதலிங்கம் பிள்ளையை, அதே பகுதியை சேர்ந்த காந்தி என்பவர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் காந்தி மீது விரோதம் கொண்டு இருந்த பூதலிங்கம் பிள்ளை, தனது அடியாள் ஒருவருடன் மது போதையில் காந்தியின் வீட்டுக்கு சென்று ரகளையில் ஈடுபட்டார்.

அப்போது, நான் எந்த வம்புக்கு வரவில்லை என காந்தி கூறியதை கேட்டு, தகாத வார்த்தைகளால் பேசி கதவை அடித்து உதைத்த பூதலிங்கம் பிள்ளை, ‘சண்டைக்கு வாடா சண்டைக்கு வாடா’ என்றும், நீ வந்து தான் பாரேன் என காமெடி நடிகர் வடிவேலு பாணியில் பஞ்ச் டயலாக் பேசி ரகளையில் ஈடுபட்டார்.

மேலும். காவல் நிலையத்தில் புகார் கொடு உனக்காக யார் வருகிறார் பார்ப்போம் என கூறியதோடு, போலீஸ் மட்டுமல்ல மிலிட்ரியே வந்தாலும் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என கூறினார். இந்நிலையில் காந்தி கொடுத்த புகாரின் அடிப்படையில் 4 பிரிவுகளில் பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் வழக்குப்பதிவு செய்ததை அறிந்த பூதலிங்கம் பிள்ளை தலைமறைவாகி உள்ள நிலையில், இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

1 thought on “‘நீ வேணும்னா சண்டைக்கு வாடா’ : குடிபோதையில் வடிவேல் பாணியில் திமுக கவுன்சிலர் ரகளை..!!

Comments are closed.