தனிவீட்டில் வேறொருவருடன் குடும்பம் நடத்திய காதலி : தர்மஅடி கொடுத்த முன்னாள் காதலன்… பரபரப்பு சம்பவம்!!

Author: Babu Lakshmanan
20 October 2021, 9:31 am
woman assulted - - updatenews360
Quick Share

கன்னியாகுமரி : நாகர்கோவில் அருகே வேறோரு நபருடன் குடும்பம் நடத்தி வந்த காதலியை, முன்னாள் காதலன் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் அடுத்துள்ள புத்தளம் பகுதியை சேர்ந்தவர் சந்தியா (26). இவர் நெசவாளர் காலனி பகுதியை சேர்ந்த மோசஸ் முத்துராஜ் என்பவரை காதலித்து அவருடன் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. பின்னர் இருவரும் சண்டையிட்டு பிரிந்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, ஜான்வினோ என்பவரை சந்தியா காதலித்து வந்துள்ளார். கோட்டார் பீச் ரோடு பகுதியில் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் மோசஸ் முத்துராஜ், சந்தியா வீட்டுக்கு சென்று தகராறு செய்ததுடன், அங்கிருந்த டி.வி, ஃபிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளார்.

மேலும், சந்தியாவையும் அவருடன் வீட்டில் இருந்த ஜான்வினோவையும் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சந்தியா அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 444

0

0