தனது மனைவியுடன் உல்லாசமாக இருந்த நண்பன்… இருவரையும் அரிவாளால் வெட்டிய ஓட்டுநர் கைது..!!

By: Babu
29 July 2021, 7:13 pm
kumari murder - updatenews360
Quick Share

கன்னியாகுமரி :கன்னியாகுமரி அருகே தனது நண்பருடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட மனைவியையும் நண்பனையும் அரிவாளால் சராமரியாக ஆட்டோ டிரைவர் வெட்டியுள்ளார்.

குமரி மாவட்டம் வடக்கு குண்டல் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (34) ஆட்டோ டிரைவர். இவரது மனைவி ஸ்ரீமதி (31) இந்த தம்பதியினருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், ஸ்ரீமதிக்கும் செல்வத்தின் நண்பர் அய்யம்பெருமாளுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இந்த கள்ளக்காதல் விவகாரம் ஆட்டோ டிரைவரான செல்வத்திற்கு தெரியவந்துள்ளது. நண்பருடன் ஏற்பட்ட கள்ளக்காதலை நிறுத்தி கொள்ளுமாறு தனது மனைவி ஸ்ரீமதியிடம், செல்வம் பலமுறை கண்டித்துள்ளார்.

இருப்பினும், இருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்றிரவு வீட்டிற்கு சென்றபோது வீட்டின் ஒரு அறை பூட்டப்பட்டு இருந்தது. அறை கதவை திறந்து பார்த்த போது இருவரும் உல்லாசம் அனுபவித்துக் கொண்டிருந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த ஆட்டோ டிரைவர் தனது மனைவி ஸ்ரீமதியையும், நண்பர் அய்யம்பெருமாளையும் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து சராசரியாக வெட்டியுள்ளார். ரத்த வெள்ளத்தில் மிதந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 495

0

0