பெண்ணின் உடலை அடக்கம் செய்வதில் தகராறு ; இருபிரிவு முஸ்லிம் அமைப்பினரிடையே மோதல்.. 25 பேர் மீது வழக்குப்பதிவு

Author: Babu Lakshmanan
24 June 2021, 2:28 pm
islamic fight - updatenews360
Quick Share

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் இறந்த பெண்ணின் உடலை அடக்கம் செய்வதில் முஸ்லிம் அமைப்பு இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக 25 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கன்னியாகுமரி முஸ்லிம் ஜமாத்தில் உள்ள முஸ்லீம்கள் கருத்து வேறுபாடு காரணமாக இரு பிரிவினராக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கன்னியாகுமரியைச் சேர்ந்த சுல்தான் என்பவரது மனைவி ரொஹியாம்மாள் (76) காலமானார். இவரது உடலை அடக்கம் செய்ய  ஜாக் என்ற அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பைச் சேர்ந்தவர்களும் அங்கு திரண்டனர். அப்போது அங்கு வாய்த்தகராறு முற்றி கை கலப்பாகாக மாறியது. பின்னர் இரு தரப்பினரும் கடுமையாக மோதிக் கொண்டனர்.

தொடர்ந்து கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்படி உடல் அடக்கம் செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் இருதரப்பை சேர்ந்த 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

Views: - 463

0

0