மதபோதகர் பெயரில் கொடிகட்டி பறந்த விபச்சாரம் : தாய் – மகள் உள்பட 7 பேர் கைது

13 July 2021, 11:01 am
sex workers - updatenews360
Quick Share

கன்னியாகுமரி : கன்னியாகுமரி அருகே விபச்சாரத்தில் ஈடுபட்ட தாய், மகள் உள்பட 7 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

குமரி மாவட்டம் நித்திரவிளை பகுதி எஸ்டி மாங்காடு பகுதியில் ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து நித்திரவிளை போலீசார் அந்த பகுதியில் சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, மதப் போதகர் என்ற பெயர் பலகை வைத்திருந்த வீட்டில் 4 பெண்கள் உட்பட இரண்டு ஆண்கள் இருந்தனர்.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியில் லால் ஷைன்சிங் (43) என்பவர் பெண்களை வைத்து விபச்சாரம் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.

பின்னர் விபச்சாரத்தில் ஈடுபட்ட 7 பேரையும் கைது செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். மேலும் விபச்சாரத்திற்கு பயன்படுத்திய சொகுசு காரும் பறிமுதல் செய்யப்பட்டது. குளச்சல் டி.எஸ்.பி தங்கராமன் நேரடி விசாரணை மேற்கொண்டார். கைது செய்யப்பட்ட 7பேரில் இரண்டு பெண்கள் தாயும் மகளும் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 348

2

0