முக்கடல் அணைப்பகுதியில் டிரோன் மூலம் படம் எடுக்க அனுமதியில்லை : குமரி மாநகராட்சி ஆணையர் உத்தரவு

16 July 2021, 10:50 am
kumari commissioner - updatenews360
Quick Share

கன்னியாகுமரி : முக்கடல் அணைப்பகுதியில் ட்ரோன் கேமராவில் படம் எடுக்க அனுமதி இல்லை.! மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;-நாகர்கோவில் மாநகராட்சிக்கு சொந்தமான முக்கடல் அணை பகுதியில் உள்ள சிறுவர் பூங்கா மற்றும் அறிவியல் பூங்காவில் போட்டோஷூட், கலையரங்கம் மற்றும் படப்பிடிப்பு ஆகியவற்றிற்கு அனுமதி வழங்கப்படும்.

அனுமதி தேவைப்படுவோர் மாநகராட்சி அலுவலகத்தில் வருவாய் பிரிவில் நேரிலோ, தொலைபேசி மூலமாகவோ முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், போட்டோ ஷூட்டுக்கு ஒருநாள் கட்டணம் ரூபாய் 2500 எனவும், கலை அரங்கத்திற்கு ரூபாய் 7000 எனவிடத, படப்பிடிப்பு சின்னத்திரை மற்றும் பெரிய திரைக்கு ரூபாய் 25 ஆயிரம் என்று ஒரு நாள் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ட்ரோன் கேமராவில் படம் எடுக்க அனுமதி இல்லை, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 224

0

0

Leave a Reply