அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மகன் : பறி போன தாயின் தாலி!!

Author: Udayachandran
10 October 2020, 2:20 pm
Nagercoil Theft - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மகனுக்கு  உணவு வாங்க சாலைக்கு வந்த பெண் அணிந்திருந்த 8 சவரன் நகையை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பறித்து ஓடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் ஊரணிநகர் பகுதியை சேர்ந்தவர் வேலம்மாள் (வயது 48). இவர் தனது மகனை அறுவை சிகிச்சைக்காக கன்னியாகுமரி மாவட்டம் சுங்கான்கடை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

அவர் அங்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில் வேலம்மாள் நேற்றிரவு மகனுக்கு உணவு வாங்குவதற்காக மருத்துவமனைக்கு முன் இருந்த உணவகத்திற்கு சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இரண்டு மர்ம நபர்கள் வேலம்மாள் கழுத்தில் இருந்த 8-சவரன் தங்க தாலி சங்கிலியை பறித்து தப்பியோடினர்.

இது குறித்து வேலம்மாள் இரணியல் காவல் நிலையத்தில் புகாரளித்தார் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மருத்துவமனை முன்பு இருந்த சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 42

0

0