கழிவு நீர் தொட்டியில் தவறி விழுந்த சினைப் பசு! பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு!!

24 August 2020, 2:39 pm
Kanyakumari Cow Rescue - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : ஆரல்வாய்மொழி அருகே திறந்த நிலையில் இருந்த செப்டிக் டேங்க்கில் தவறி விழுந்த கன்று ஈனும் நிலையில் உள்ள பசுவை அப்பகுதி இளைஞர்கள் துணையுடன் தீயணைப்பு துறையினர் பசுவை உயிருடன் பாதுகாப்பாக மீட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே முத்து நகர் பகுதியை சேர்ந்தவர் வர்கீஸ். இவருக்கு சொந்தமான சில தினங்களில் கன்று ஈனும் நிலையில் உள்ள சினை பசு அப்பகுதியில் புல் மேய்ந்து கொண்டு இருந்தது.

அப்போது அப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான சிமெண்ட் கற்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் ஊழியர்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டு இருந்த திறந்த நிலையில் காணப்பட்ட செப்டிக் டேங்கில் சினை பசு தவறி விழுந்தது.

தவறி விழுந்த பசு உயிருக்கு ஆபத்தான நிலையில் செப்டிக் டேங்கில் இருந்து வெளியே வர முயற்சி செய்ததோடு வேதனையில் அலறியது. பசுவின் அலறல் சத்தம் கேட்டு வந்த அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பசுவை மீட்க முயன்றன.

ஆனால் இளைஞர்களால் பசுவை மீட்க முடியாததால் நாகர்கோவில் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த ஏழு பேர் கொண்ட தீயணைப்பு துறை வீரர்கள் அப்பகுதி இளைஞர்கள் உதவியுடன் பல மணி நேரம் போராடி பசுவை உயிருடன் மீட்டனர்.

செப்டிக் டேங்கில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய சினை பசுவை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினரையும் அப்பகுதி இளைஞர்களையும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

Views: - 39

0

0