தனியார் மதுபான விடுதியை சூறையாடிய போலீசார் : சிசிடிவிகளை வெளியிட்ட நிர்வாகம்…

Author: kavin kumar
9 February 2022, 8:38 pm

கன்னியாகுமரி : குழித்துறையில் உள்ள தனியார் மதுபான விடுதியை உடைத்து மது பாட்டில்களை அள்ளிச்சென்ற போலீசாரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் உள்ள பிரபல மதுபான கடையில் நேற்று களியக்காவிளை காவல் நிலைய போலீசார் உள்ளே புகுந்து மது கூடத்தின் பூட்டை உடைத்து 650 மது பாட்டில்களை அள்ளி சென்றதோடு, அங்கிருந்த இரண்டு பணியாளர்களையும் பிடித்து சென்றனர். இதனால் அரண்டு போன நிர்வாகத்தினர். அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை எடுத்து ,அரசு நிர்ணயித்த படி காலை 11 -மணி முதல் இரவு 11- மணி வரை மட்டுமே மதுபானங்கள் விற்பனை செய்வதாகவும், அரசு உத்தரவை மீறி மது விற்பது கிடையாது என்பதை ,உறுதிபடுத்தும் விதத்தில் ஒரு வார காலத்திற்குள் உள்ள சிசிடிவி காட்சிகளை எடுத்து மேலதிகாரிகளுக்கு அனுப்பிவைத்து, மது பாட்டில்களை அள்ளிச் சென்றதையும் இருவரை கைது செய்த தகவலையும் தெரிவித்துள்ளனர்.

மேலும் முறைப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்றால், சட்ட உதவியை நாட போவதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ந்து போன காவல்துறை அதிகாரிகள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், அரசு நிர்ணயித்த நேரத்தை தவிர மற்ற நேரங்களில் மதுபானம் விற்க்கப்படவில்லை என்பது உறுதியாக தெரிந்ததை அடுத்து, களியக்காவிளை ஆய்வாளர் எழிலரசியிடம் அங்கிருந்து கைப்பற்றப்பட்ட மது பாட்டில்கள் மற்றும் கைது செய்த இருவரையும் விடுதலை செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து .உடனடியாக இருவரையும் விடுவித்த போலீசார், கைப்பற்றப்பட்ட மது பாட்டில்களையும் வாகனத்தில் திருப்பி அனுப்பி வைத்தனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!