38 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பலி.. பாதிப்பில் போட்டி போடும் சென்னை, கோவை : தமிழகத்தில் இன்றைய நிலவரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 February 2022, 8:19 pm
TN Corona -Updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தை பொறுத்தளவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், இன்று சற்று குறைந்தே காணப்படுகிறது.

தமிழகத்தில் நேரத்தில் 3,917 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34 லட்சத்து 24 ஆயிரத்து 476 ஆக அதிகரித்துள்ளது.சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 90 ஆயிரத்து 137 ஆக குறைந்துள்ளது.

இன்று 28 பேர் உயிரிழந்துள்ளார். 12 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 16 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர்.இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37 ஆயிரத்து 837 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 16,473 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 33 லட்சத்து 09ஆயிரத்து 032 ஆக அதிகரித்துள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் 742 பேருக்கும், கோவையில் 726 பேருக்கும், செங்கல்பட்டில் 334 பேருக்கும், திருப்பூரில் 245 பேருக்கும், சேலத்தில் 212 பேருக்கும், ஈரோட்டில் 203 பேர் என கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Views: - 366

0

0