உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட ரொக்கம் பறிமுதல் : தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி நடவடிக்கை

Author: kavin kumar
9 February 2022, 7:50 pm

கள்ளக்குறிச்சி : மணலூர்பேட்டையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட 2 லட்சத்தி24 ஆயிரத்து 540 ரூபாய் ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை to திருவண்ணாமலை செல்லும் சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்க வாகனத்தை சோதனையிட்டனர். அதில், மைக்ரோ ஃபைனான்ஸ் பணிபுரியும் மணிகண்டன் என்பவர் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு வந்த 2 லட்சத்தி24 ஆயிரத்து 540 ரூபாய் ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, மணலூர்பேட்டை பேரூராட்சி தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் ஸ்டாலினிடம் ஒப்படைத்தனர்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?