ஏடிஎம்மில் கிடைத்த பணத்தை போலீசில் ஒப்படைத்த நபர் : குவியும் பாராட்டு…

Author: kavin kumar
9 February 2022, 7:30 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி ஏடிஎம் மையத்தில் இருந்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்தவருக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர். மேலும் அந்த பணத்தை போலீசார் உரிய பெண்ணிடம் ஒப்படைத்தனர்.

புதுச்சேரி முருங்கப்பாக்கம் காமராஜர் வீதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவரது மனைவி சாந்தி (45). இவர் பிள்ளையார் குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தனது செலவிற்காக, தனியார் மருத்துவமனை வாசலில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு சென்ற அவர், ரூபாய் 10 ஆயிரம் எடுக்க முயற்ச்சித்துள்ளார். ஆனால் ஏடிஎம் எந்திரத்தில் இருந்து பணம் வெளியே வராததால் அவர் அங்கிருந்து சென்றுவிட்டார். சிறிது நேரத்தில் அவரது செல்போன்னிற்கு பணம் எடுக்கப்பட்டதாக ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், இதுகுறித்து வங்கியில் புகார் தெரிவித்துள்ளார்.

இதனிடையே அந்த ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுப்பதற்காக சிதம்பரத்தை சேர்ந்த சந்திரகுமார் என்பவர் சென்றுள்ளார். அப்போது ஏடிஎம் எந்திரத்தில் பணம் வெளியில் இருப்பதை கண்டு அதனை கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இதுதொடர்பாக கிருமாம்பாக்கம் சார்பு ஆய்வாளர் முருகானந்தம் சம்பந்தப்பட்ட வங்கி கிளைக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட பணம் சாந்தி உடையது என வங்கி ஊழியர்கள் உறுதி செய்ததை அடுத்து வங்கி ஊழியர் ராமராஜ் முன்னிலையில், சார்பு ஆய்வாளர் முருகானந்தம், அந்த பணத்தை சாந்தியிடம் ஒப்படைத்தார்.
மேலும் பணத்தை ஏடிஎம் மையத்திலிருந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த சந்திரகுமாரை போலீசார் வெகுவாக பாராட்டினர்.

Views: - 410

0

0