கடத்தப்பட்ட பெண் குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைத்த போலீசார் : முத்த மழையில் நனைந்த தாய்!!

Author: Udayachandran
1 October 2020, 4:43 pm
Child rescue- updatenews360
Quick Share

கன்னியாகுமரி : பெங்களூரில் இருந்து ஐஸ் கிரீம் வாங்கி கொடுத்து கடத்தபட்ட ஐந்து வயது பெண் குழந்தையை கன்னியாகுமரி அருகே போலீசார் நேற்று மீட்ட நிலையில் குழந்தையை இன்று தாயிடம் ஒப்படைத்தனர்.

பெங்களூரில் இருந்து கடந்த பத்து நாட்களுக்கு முன் ஐஸ் கிரீம் வாங்கி கொடுத்து சிறுமி கடத்தபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கர்நாடகா போலீசார் தென் மாநில காவல் நிலையங்களுக்கு குழந்த கடத்தல் சம்பவத்தை தெரிய படுத்தி உள்ளனர்.

இந்நிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் காட்டாகடை பகுதியை சேர்ந்த ஜோசப் ஜான் என்பவர் தனது மனைவியுடன் இரண்டு குழந்தைகளோடு களியக்காவிளை பேருந்து நிலையத்தில் இருந்து தமிழக கேரள எல்லை சோதனை சாவடியை தாண்டி செல்ல முயன்ற நேரத்தில் அவருடன் வந்த பெண் குழந்தை தொடர்ந்து அழுவதை பார்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவருடன் வந்த பெண் குழந்தை லோகிதா கடத்தி வந்தது தெரியவந்தது. தொடர்ந்து அந்த தம்பதி, தங்களது குழந்தை என்று தெரிவிக்கவே அவருடன் வந்த ஆறு வயது ஆண் குழந்தையிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது கடந்த 25 தினங்களுக்கு முன்பு பெங்களூர் மெஜஸ்டிக் பகுதியில் இருந்து பிச்சை எடுத்து கொண்டிருந்தவர்களுக்கு குளிர்பானங்கள் வாங்கி கொடுத்ததோடு குழந்தைக்கு ஐஸ் கிரீம் வாங்கி கொடுத்து அந்த குழந்தையை கடத்தி வந்ததாக அந்த சிறுவன் தெரிவித்துள்ளான்.

அதைத்தொடர்ந்து அவர்களை களியக்காவிளை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். குழந்தைகளை நாகர்கோவில் காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர். அதில் ஆண் குழந்தை ஜான் ஜோசபின் முதல் மனைவிக்கு பிறந்த குழந்தை என்றும் தெரியவந்தது.

இந்நிலையில் குழந்தை லோகிதாவின் தாய் கார்த்திகா மற்றும் உறவினர்கள் பெங்களூர் மெஜஸ்டிக் காவல் நிலையத்தில் இருந்து வந்த போலீசார், இன்று காலை , கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்தனர்.

பின்னர் மாவட்ட போலீஸ் எஸ்பி பத்ரி நாராயணன் அந்த குழந்தையை பெங்களூர் போலீசாரிடம் ஒப்படைத்தார். இதுதொடர்பான வழக்கை பெங்களூர் மெஜஸ்டிக் போலீசார் கையாண்டு வருவதால் ஜான் ஜோசப் பையும் பெங்களூருக்கு அழைத்துச் சென்று மேல் விசாரணையை பெங்களூர் சென்ற பின் தொடர்வார்கள் என தெரியவருகிறது.

Views: - 41

0

0