படகு போக்குவரத்தை இயக்க வேண்டும் : கன்னியாகுமரி வியாபாரிகள் கோரிக்கை!!

19 November 2020, 7:38 pm
Boat Service - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் இன்னும் படகு போக்குவரத்து துவங்காததால் படகு போக்குவரத்தை துவக்கி சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்று கன்னியாகுமரி வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர்.

கொரானா தடை உத்தரவு காரணமாக சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடந்த எட்டு மாதங்களாக கடைகள் எதுவும் திறக்கப்படாமல் படகு போக்குவரத்து இன்றி வியாபாரிகள் வறுமையில் வாடி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் கன்னியாகுமரியில் புதிதாக இரண்டு படகுகளை துவக்கி வைத்துள்ளார் மேலும் இந்த படகு போக்குவரத்து உடனடியாக செயல்பட்டு வருவதாகவும் அறிவித்தார். ஆனால் அவர் அறிவிப்பு விடுத்து பத்து தினங்கள் ஆகியும் இன்னும் இதுவரை படகு போக்குவரத்து துவங்கப்படவில்லை.

இதுகுறித்து இன்று கன்னியாகுமரி வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது அவர் கூறுகையில் ” சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து தூங்காததால் சுற்றுலா பயணிகள் யாரும் வரவில்லை. தற்போது ஐயப்ப பக்தர்களின் சீசன் துவங்கியுள்ளது இந்த மூன்று மாத சீசன் காலத்தில் கிடைக்கும் வருமானம் மட்டுமே தங்களை ஓராண்டிற்கு தாக்குபிடிக்க செய்கிறது எனவே கன்னியாகுமரியில் உடனடியாக படகு போக்குவரத்தை துவங்கி சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

Views: - 0

0

0