‘தண்ணீரில் எங்காவது விளக்கு எரியுமா?’ என்று இனி கேட்க முடியாது ; மாடர்ன் கார்த்திகை தீபம் கொண்டாடிய தம்பதி..!!

Author: Babu Lakshmanan
6 December 2022, 9:35 pm
Quick Share

செலவில்லாதது தண்ணீரில் வைத்து மின்சாரம் உற்பத்தி செய்து எல்.இ.டி. விளக்கு எரிவது போன்று தற்பொழுது தண்ணீரை ஊற்றினாலே விளக்கு எரியும் வசதி பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

நவீனமயமாக தற்பொழுது மாறிவரும் உலகம் ஒவ்வொன்று வித்தியாசமாகவும் எளிய முறையில் கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. நமது முன்னோர்கள் எண்ணையை ஊற்றி தீபம் ஏற்றி வழிபட்டு வந்தனர். ஆனால் தற்பொழுது தலைமுறையினர் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் எவ்வித செலவுமின்றி தற்பொழுது தீபம் ஏற்றி வழிபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை சிவானந்தா காலனி பகுதியில் சமீபத்தில் திருமணம் ஆன ரமேஷ் -புவனேஸ்வரி தம்பதியினர் தங்கள் வீட்டு முன்பு உள்ள இடங்களில் தண்ணீரில் எரியும் விளக்குகளை ஏற்றியும், வீட்டுக்கு உள்ள பூஜையறையில் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபட்டனர்.

விளக்கு எரிய ஒரு டம்ளர் தண்ணீர் போதும் விளக்கு மீது தண்ணீரை ஊற்றியதும் அதன் மேல் பொருத்தப்பட்டுள்ள பல்பு எரிய ஆரம்பிக்கும். நாம் தண்ணீர் ஊற்றும் போது அதன் மேல் பொருத்தப்பட்டுள்ள குண்டூசிகள் பேட்டரியின் மீது பட்ட உடன் அதில் பொருத்தப்பட்டுள்ள விளக்கு எரியத் தொடங்குகிறது. இது முற்றிலும் பாதுகாப்பானது என்று கூறுகின்றனர்.

Views: - 210

0

0