மாரடைப்பால் கருமத்தம்பட்டி போலீஸ் உயிரிழப்பு

24 December 2020, 8:08 am
Quick Share

தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த அண்ணாமலைபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர் 26 வயது பட்டதாரியான இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு இரண்டாம் நிலை காவலர் தேர்வில் வெற்றி பெற்று ஆயுதப் படையில் பணியாற்றி வந்தார்.

பின்னர் 16. 9 .2019 அன்று கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்தார். கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் மருத்துவ விடுமுறை எடுத்துக்கொண்டு ராஜசேகர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சொந்த ஊருக்கு சென்று உள்ளார்.

இதனிடையே சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உறவினர் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக ராஜசேகர் நேற்று காலை வந்துள்ளார் இந்நிலையில் காலை 6 மணி அளவில் மருத்துவமனை வளாகத்தில் நடந்து வந்து கொண்டிருந்த அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது வலியால் அலறி துடித்த அவர் ஒரு இருக்கையில் அமர்ந்தவாறு அமர்ந்துகொண்டு திடீரென மயங்கி விழுந்தார்.

இதனையடுத்து அவரை மருத்துவமனை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் மாரடைப்பால் அவர் உயிரிழந்தது தெரியவந்தது, இதனை அடுத்து அவரது உறவினர்கள் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ராஜசேகர் உடல் அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டு புதன்கிழமை மாலை அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனிடையே காவலர் ராஜசேகர் நெஞ்சு வலியால் துடிப்பதும் ஒரு இடத்தில் போய் அமர்ந்து இருப்பதும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.உயிரிழந்த ராஜசேகருக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் கருமத்தம்பட்டி காவல்துறையினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 0

0

0