உதயமாகும் க.தி.மு.க : மு.க.அழகிரி தலைமையில் புதிய கட்சி!!

21 August 2020, 10:26 am
MK Alagiri- Updatenews360
Quick Share

மறைந்த கலைஞர் கருணாநிதியின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி தலைமையில் புதிய கட்சி உருவாகவுள்ளது.

தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெறுகிறது. ஆட்சியை பிடிக்க அரசியல் கட்சிகளின் பணிகள் படுவேகமாக நடந்து வருகிறது. அதிமுக, திமுக கட்சிகள் நிர்வாக அமைப்புகளை மாற்றி வருகின்றன.
ஒரு பக்கம் தேர்தல் பணிகளும், மறுபக்கம் கட்சி விட்டு கட்சி மாறும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

இந்த நிலையில் எந்த சத்தமும் இல்லாமல் இருந்த மு.க.அழகிரி தற்போது தேர்தல் கோதாவில் இறங்கியுள்ளார். கருணாநிதி இருந்த போது திமுகவில் இணைய பல முயற்சிகளை கையாண்ட அழகிரி, கருணாநிதி மறைந்த பின் அந்த முயற்சியில் இருந்து பின் வாங்கிவிட்டார். அவ்வப்போது டிவிட்டர் பக்கத்தில் தலை காட்டிய மு.க.அழகிரி தற்போது முழு வீச்சில் தேர்தல் பணிகளில் இறங்கவுள்ளதாக அவரின் ஆதரவாளர்கள் படு குஷியில் உள்ளனர்.

ரஜினி கட்சி, பாஜக என தன்னை சுற்றி வந்த வதந்திக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் அளவிற்கு வந்துள்ள செய்தி மு.க.அழகிரி ஆதரவாளர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மு.க.அழகிரி தலைமையில் கலைஞர் திமுக நிச்சயம் துவங்கும் என்றும் அதற்கான நேரத்தை மு.க.அழகிரி குறித்து வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

எந்த கட்சிக்கும் செல்லாமல் இருந்த அழகிரியை தொடர்பு கொண்டு அவரது ஆதரவாளர்கள் கட்சியை தொடங்க வேண்டும் என சமீபகாலமாக கேட்டு வந்துள்ளனர். தற்போது அதற்கான நேரம் வந்து விட்டது என அழகிரி கூறியுள்ளது அவரது ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. சட்டப்பேரவை தேர்தல் வருவதற்குள் தமிழக அரசியலில் பல திருப்பங்களுக்கும், பரபரப்புகளுக்கு நிச்சயம் பஞ்சமிருக்காது.

Views: - 43

0

0