காவல்துறையை கைநீட்டி மிரட்டிய மாவட்ட பாஜக தலைவர்… கரூரில் நடந்த போராட்டத்தின் போது சலசலப்பு..!!

Author: Babu Lakshmanan
11 December 2023, 8:36 pm

கரூரில் பாஜகவினர் நடத்திய போராட்டத்தின் போது, அக்கட்சியின் மாவட்ட தலைவர் செந்தில் நாதன், காவல்துறையினரை மிரட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கரூர் அருகே உள்ள வாங்கப்பாளையம் எம்.ஜி.ஆர் சிலை அருகே இந்தியாவில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஊழல் தலைவிரித்து ஆடுவதை கண்டித்து கரூர் மாவட்ட பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த, கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதன், கட்சி துண்டுக்கு பதில், பட்டு வஸ்திரம் அணிந்து கலந்து கொண்டார்.

பாரதியார் ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் கூட பட்டு வஸ்திரம் அணியாத நிலையில், மாவட்டத் தலைவர் செந்தில்நாதன் மட்டும் பட்டு வஸ்திரம் அணிந்து நிகழ்ச்சிகளில், கலந்து கொள்வது இது இரண்டாவது முறை, ஏனென்றால் ஏற்கனவே, மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைத்த நிலையில், அதற்கு திருக்காம்புலியூர் பைபாஸ் ரவுண்டானா பகுதியில் வெடிவைத்து கொண்டாடிய பாஜக நிகழ்ச்சியில், மாவட்டத் தலைவர் செந்தில்நாதன் பட்டு வஸ்திரம் அணிந்து கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இது ஒரு புறம் இருக்க, வெங்கமேடு காவல்துறையினர் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பொருட்டு, ஒரு புறம் சாலையையே அடைத்து, ஆர்ப்பாட்டம் என்பது எப்படி என்றும், அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலாக ஆர்ப்பாட்டம் நடத்துவது ஏன் என்றும் கேள்வி எழுப்பிய நிலையில், பொதுமக்கள் செல்வதற்காக சற்று நகர்ந்து, கொள்ளுங்கள் என்று கூறிய காவல்துறையினரை, கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதன் எச்சரிக்கை செய்ததோடு, ரோட்டில் உட்காரட்டுமா, என்று எச்சரித்தார்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுமக்கள் காவல்துறையினர் உதவியுடன் இரு சக்கர வாகனத்தில் ஒன்றன்பின் ஒன்றாக பயணித்து கூட்ட நெரிசலை சமாளித்தனர். தமிழக அளவில் பாரதிய ஜனதா கட்சி தற்போது அதன் தமிழக தலைவர் அண்ணாமலையால் வளர்ந்து வரும் நிலையில், கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியில் மட்டும் பட்டு வஸ்திர அரசியல் அரங்கேறியுள்ளதை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டு கொள்வாரா ? என்கின்றனர் பாஜக தொண்டர்கள்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?