திமுக ஆட்சியை காரி துப்பும் பொதுமக்கள்… அண்ணாமலையிடம் ஆட்சியை கொடுத்து பாருங்க ; சசிகலா புஷ்பா அதிரடி

Author: Babu Lakshmanan
11 December 2023, 9:39 pm
Quick Share

கனிமொழி எம்பியின் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தீர்ப்பு விரைவில் வரவுள்ளது என தூத்துக்குடியில் பாஜக மாநில துணை தலைவர் சசிகலாபுஷ்பா தெரிவித்தார்.

தூத்துக்குடி மச்சாது நகரில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :- ஒடிசாவில் கருப்பு பணம் கொள்ளை, காங்கிரஸ் ராஜ்யசபா எம்பி தீரஜ் சாஹூ அவருடைய வீட்டிலும், அலுவலகத்திலும், கம்பெனியிலும் நடந்த வருமான வரித்துறை சோதனையில் அதில் பிடிபட்ட கருப்பு பணம் 300 கோடிக்கு மேல் என்பது இந்திய வரலாற்றிலேயே மிக அதிகமாக எடுக்கப்பட்ட ஒரு பணமாக கருதப்படுகிறது.

காங்கிரஸ் சார்ந்த இந்த எம்பி மூன்று முறை ராஜசபா எம்பி கொடுக்கப்பட்டதன் காரணம் என்ன பாரதிய ஜனதா கட்சி கேள்வி கேட்கிறது. இரண்டு முறை லோக்சபா தேர்தலில் தோல்வியுற்ற ஒரு நபருக்கு ராஜ்யசபா எம்பி வழங்கி, அவரிடம் இருந்து கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய் வருமானவரித்துறை சோதனையில் கருப்பு பணம் எடுக்கப்பட்டு இருக்கிறது என்று சொன்னால், காங்கிரஸ் கட்சி ஒரு கொள்ளைக்கார கட்சியா..? கருப்பு பணத்தை உலா விடும் கட்சியா இவ்வளவு பணத்தை வைத்து என்ன செய்யப் போகிறார்கள் என்பது தெரியவில்லை.

ஒரு பக்கம் இந்தியாவில் உள்ள கருப்பு பணத்தை எல்லாம் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை எல்லாம் மீட்டு மக்களிடம் தருவேன் என பிரதமர் மோடி சபதமிட்டு பணியாற்றி கொண்டு வருகிறார். இன்னொரு பக்கம் நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஆளுகின்ற மாநிலங்களில் பதுக்கி வைப்போம் என சொல்லி, அங்குமிங்கும் கருப்பு பணத்தை உலவிட்டுக் கொண்டிருக்கும் காங்கிரஸ் ஒரு பக்கம் என இரண்டு பேரையும் பார்க்கும்பொழுது, இந்தியாவில் பிஜேபி மிகவும் கடினமாக உழைத்து, லஞ்ச லாவணியத்தை அடக்க முனைவது தெரிய வருகிறது.

ஒரு காங்கிரஸ் எம்பி இடம் 350 கோடிக்கு மேல் உள்ளது என்றால் எத்தனை காங்கிரஸ் எம்பிகளிடம் கூட்டி கழித்து பார்த்தோம் என்றால், எத்தனை ஆயிரம் கோடிகள் இருக்கும் இந்த நாட்டை கபாலிகரம் செய்து, இத்தனை வருசம் வைத்துள்ளார்கள் என்பது மிகப்பெரிய விஷயமாக இந்தியா பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்திய வரலாற்றில் இவ்வளவு பெரிய பணத்தை ஒட்டுமொத்தமாக எடுத்தது காங்கிரஸ் ராஜ்யசபா எம்பி வீட்டில் தான் என்றால், இப்படிப்பட்ட கருப்பு பண கொள்ளையருக்கு காங்கிரஸ் புகலிடம் கொடுத்து வளர்த்து விடுவது எதற்காக..? தேர்தலில் கருப்பு பணத்தை உலவிடுவதற்காக இவர் போன்ற எம்பிக்களை காங்கிரஸ் பயன்படுத்துகிறதா என்பதுதான் பாரதிய ஜனதா கட்சியின் கேள்வி?

தூத்துக்குடி மாவட்டத்தை பொருத்தவரை கனிமொழி எம்பி ஒன்னே முக்கால் லட்சம் கோடி 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் லட்சம் கோடி வழக்கு நடைபெற்று வருகிறது. அவரும் தற்போது எம்பி ஆகத்தான் உள்ளார். ஒன்னே முக்கால் லட்சம் கோடி ஊழல் என்பது சாதாரண விஷயம் கிடையாது. இந்திய நாட்டையே உலுக்கிய இந்த விஷயம் இன்னும் அவர் எம்பியாக நீடிக்கிறார். இதன் தீர்ப்பு விரைவில் வரும்.

எத்தனை லட்சம் கோடி ஊழல் செய்தும் மக்கள் வரிப்பணத்தை எடுத்து விட்டு, பொதுமக்கள் நிஜாம் புயலில் ஏழைகள் பால் வாங்க கஷ்டப்படுகிறார்கள், இளைஞர்களுக்கு தமிழகத்தில் வேலை வாய்ப்பு இல்லை, வேலைவாய்ப்பு திண்டாட்டம் விலைவாசி உயர்ந்துள்ளது, மின் கட்டணம் உயர்ந்துள்ளது, வரி 8 முதல் 9% அதிகமாக உள்ளது. சொத்துக்கள் பதிவு செய்ய முடிவதில்லை பொதுமக்களை பாதிக்க கூடிய எல்லா விஷயங்களும் செய்து விட்டு ஒரு பக்கம் பணக்காரர்கள் மட்டும் வளர்ந்து கொண்டே வருகிறார்கள். பிரதமர் மோடி அவர்கள் நிச்சயமாக இது போன்ற கருப்பு பண முதலைகளை விட மாட்டார். இந்தியாவில் அவர் காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும் சரி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உட்பட யாராக இருந்தாலும் சரி, இந்தியாவில் ஒடிசா, ஜார்கண்ட் மாநிலங்களில் எல்லா இடங்களிலும் பரவியுள்ளது. தீரஜ் சாஹூ அவருடைய பணம் கண்டுபிடிக்கப்பட்ட 300 கோடிக்கு மேல் பல மாநிலங்களில் சுருட்டி வருமானவரித்துறையால் எடுக்கப்பட்டுள்ளது.

வருமானவரித்துறை நாட்டில் உள்ள கருப்பு பணத்தை வெளியே கொண்டு வந்தால், மோடி அரசாங்கம் வருமானவரி துறையை வைத்து பயம் காட்டுவதாக கூறுகிறார்கள். கிட்டத்தட்ட 350 கோடி கிடைத்தது என்ன செய்வது கருப்பு பண முதலைகளை விட்டு வைக்க வேண்டும் என சொல்கிறார்கள் என தெரியவில்லை. கடந்த அறுபது எழுபது வருடங்களாக காங்கிரஸ் இந்தியாவை அகல பாதாளத்தில் கொண்டு சென்றது காங்கிரஸ் கட்சி. இந்தியாவை பிரதமர் மோடிஜி வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றுள்ளார். உலகம் முழுவதிலும் உள்ள இந்தியர்களுக்கு பிரதமர் மோடியால் மரியாதை வந்துள்ளது. இண்டியா என்ற கூட்டணியை வைத்துக்கொண்டு, அதில் திமுகவையும் வைத்துக்கொண்டு சர்க்காரியா கமிஷன் ஊழலில் பெயர் போனது திமுக.

காங்கிரஸ் எம்பி இடம் கருப்பு பணம் பிடிப்பட்டதை தொடர்ந்து ராகுல் காந்தியை ஊழல் மையம் என மக்கள் பேசி வருகிறார். கருப்பு பணம் பிடிப்பட்டதில் ராகுல் காந்திக்கு கண்டிப்பாக தொடர்பு இருக்கும். இதற்கு காங்கிரஸ் மேலிடம் சோனியா காந்தி என்ன பதில் சொல்லப் போகிறார். ஓபிசி, எஸ்சி, எஸ்டி-க்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தது பாரதிய ஜனதா கட்சி என்றார். இதை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்ததாக அவர் தெரிவித்தார்.

தமிழக அரசின் செயல்பாடு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு சென்னையை சென்று நீங்கள் பார்த்து வந்த பிறகுதான் அதன் மிக்ஜாம் புயலின் பாதிப்பு நிலைமை உங்களுக்கு புரியும் என்றார். பொதுமக்கள் திமுக ஆட்சியை காரி துப்புவதாக அவர் குறிப்பிட்டார். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியிடம் ஆட்சியை கொடுத்து பாருங்கள், புயல் வெள்ளம் வருவதை அண்ணாமலை எப்படி தடுக்கிறார் என்பதை பார்க்கப் போகிறீர்கள், என்றார்.

பேட்டியின் போது பாஜக தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன், வடக்கு மாவட்டதலைவர் வெங்கடேசன் சென்னகேசவன், மாவட்ட பொதுச்செயலாளர் உமரிசத்தியசீலன், ஒபிசி அணி மாநில துணைத்தலைவர் விவேகம் ரமேஷ், மாவட்ட துணை தலைவர்கள் சிவராமன், தங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு பாஜக துணை தலைவர் சசிகலா புஷ்பா மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்பு மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னைக்கு நிவாரண பொருட்கள் பாஜக மாவட்ட அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டதை அவர் பார்வையிட்டார்.

Views: - 367

0

0