பாலியல் புகார் குறித்து திமுக ஆட்சியில் நீதி கிடைக்கல… ஜாகீர் உசேன் மீது நடவடிக்கை தயக்கம் ஏன்..? இசைப்பள்ளி ஆசிரியை கண்ணீர்..!!

Author: Babu Lakshmanan
10 June 2022, 11:38 am

பரத கலைஞர் ஜாகீர் உசேன் மீதான பாலியல் புகார் குறித்து அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், நீதிமன்றத்தை அணுகப் போவதாக பாதிக்கப்பட்ட இசைப்பள்ளி ஆசிரியை தெரிவித்துள்ளார்.

பாலியல் புகார் தொடர்பான சர்ச்சை கலையியல் அறிவுரைஞரும், பரதநாட்டிய கலைஞருமான ஜாகீர் உசேன் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. திமுகவின் பின்புலத்தால் அவர் தப்பி வருவதாக குற்றம்சாட்டப்பட்டு வரும் நிலையில், ஜாகிர் உசேன் மீது பாலியல் புகார் அளித்த, பரத நாட்டிய ஆசிரியை சுஜாதா, கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி அன்று சென்னை கலைப்பண்பாட்டுத்துறை இயக்குநரிடம் எழுத்து பூர்வமாகவும் புகார் அளித்திருந்தார்.

இதனையடுத்து விசாகா கமிட்டியும் அமைக்கப்பட்டும், ஏப்ரல் மாதம் 5ம் தேதி அன்றும், அதற்கு பின்பு அதே மாதம் 24ம் தேதியும் பரத நாட்டிய ஆசிரியை (சுஜாதா )யிடம் விசாரணை நடைபெற்றது. ஆனால், இன்று வரை ஜாகீர் உசேன் மீது எந்தநடவடிக்கை இல்லை.

இந்நிலையில், விசாகா கமிட்டியிடம் எனது புகார் தவறானது என்றும், ஆகவே அது குறித்து ஒரு சில தனியார் தொலைக்காட்சிகளில் தவறாக செய்திகள் வெளியிடப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட பரத நாட்டிய ஆசிரியை சுஜாதா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, அவர் கூறியதாவது :- 23 ஆண்டுகளாக, இந்த துறையில் பணியாற்றி வரும் நான் (சுஜாதா), இந்த கரூர் அரசு இசைப்பள்ளியினை 97ம் ஆண்டு துவக்கி வைத்தது முன்னாள் மறைந்த முதல்வர் கருணாநிதி ஆவார். பல எண்ணற்ற இசைக்கலைஞர்களை உருவாக்கிய கருணாநிதியின் ஆட்சியில், தற்போது எங்களது கரூர் அரசு இசைப்பள்ளிக்கு கலை அறிவுரைஞரான பரத நாட்டிய கலைஞர் ஜாகீர் உசேன், என்னிடம் நடந்து கொண்ட விதம் கண்டிப்பாக தண்டிக்க கூடிய அளவிற்கு ? சொல்ல முடியவில்லை.

ஆகவே உடன் பணியாற்றி வரும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளுக்கு எல்லோருக்கும் தெரியும். ஆனால் நடந்ததை எல்லாம், அனைத்தையும் முறையிட்டு அனுப்பி இருந்தேன். நேரில் சந்தித்து, பெண்ணுக்கு நடந்த அவமானத்தினை அனைத்தினையும் எழுதி கடிதம் மூலமாக அளித்தேன். அதன் மூலம் அமைக்கப்பட்டிருந்த விசாகா கமிட்டி மூலம் நீதி கிடைக்கும் என்று நம்பிய நிலையில், அந்த புகாரினை மறைத்து தவறான செய்திகளாக ஒரு சில தனியார் தொலைக்காட்சிகளில் தவறாக ஒளிபரப்பாகி இருந்தது. ஒரு அறைக்குள் நடந்த சம்பவம் எப்படி ஜாகீர் உசேன் ஒரு நிரபராதி என்று கூறுகின்றார்கள் என்று தெரியவில்லை.

ஆகவே, அனைத்து துறையில் பணியாற்றும் பெண்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் நான், புகார் அளித்து அதற்கான நீதிக்காக காத்திருந்தேன். ஆனால், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி செய்யும் இந்த பொற்காலத்தில், இப்படியும் ஒரு சம்பவம் நிகழ்ந்தும், இன்று வரை ஜாஹீர் உசேன் மீது நடவடிக்கை இல்லை. பெண்களுக்கு என்ன ஒரு பிரச்சினை இருந்தாலும் ஒரு தகப்பனாக என்னிடம் கூறுங்கள் என்று தெரிவித்திருந்தார்.

ஆனால், நான் முதல்வர் மு.க.ஸ்டாலினை ஒரு சகோதரராக நினைத்து புகார் தெரிவித்திருந்தேன். ஆனால் அதற்கு மாறாக என் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல், ஜாகீர் உசேன் மீது அக்கறை கொள்ளப்பட்டுள்ளது. ஆகவே இனி முதல்வரிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், பெண்களின் நீதிக்காகவும், என்னைப்போல் யாரும் பாதிக்கப்படாமல் இருக்க நீதிமன்றத்தினை நாட உள்ளேன், என்று பாதிக்கப்பட்ட பரத நாட்டிய ஆசிரியை சுஜாதா பத்திரிக்கையாளர்களிடம் கண்ணீர் மல்க கூறினார்.

திராவிட ரோல் மாடல் ஆட்சியில் குற்றம் சுமத்தப்பட்டவர், மு.க.ஸ்டாலினின் நிகழ்ச்சிகளிலும், அவரது விழாக்களிலும், துபாய் செல்வது வரை இருக்கும் போது, ஒரு சாதாரண பெண்ணுக்காக, வெளிப்படையாகவும், நடுநிலையாகவும் அரசு இருக்காதா? என்று பெண்கள் அமைப்பினர் கூறி வருகின்றனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!