கமலஹாசன் எடுத்த திடீர் முடிவால் ரசிகர்கள் அதிருப்தி.. இத யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டாங்க.!

Author: Rajesh
10 June 2022, 12:53 pm
Quick Share

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகும் கமல் படம் என்பதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இதற்கு முன்பு வெளியாக வேண்டிய இந்தியன் 2 திரைப்படம் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது.

மேலும் கமல்ஹாசன் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வந்ததால் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். பின்பு தனது சிஷ்யனான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற படத்தில் நடித்தார். இந்தப் படத்தைப் பற்றிய அறிவிப்பு வந்ததிலிருந்தே இப்படம் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய உயரத்தில் இருந்தது. மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் என சிறந்த நடிகர்கள் என்று அழைக்கப்படும் அனைவருமே இப்படத்தில் இருந்தனர்.  இந்த நிலையில், விக்ரம் தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸை மீட்டு எடுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு பல இடங்களில் வசூல் மழை கொட்டி வருகிறது. 

அதன் காரணமாக இனி வரும் படங்களில் தனது வயதுக்கேற்ற கதாபாத்திரங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடிப்பது என உறுதி கொண்டுள்ளாராம் கமல்ஹாசன். ஒரு காலத்தில் கமல் படம் என்றாலே அதில் கட்டாயம் காதல் காட்சி மிக அருமையாக இருக்கும். காதல் பாடல்கள் கதாநாயகியுடன் ரொமான்ஸ் காட்சிகள், கண்டிப்பாக ஒரு முத்த காட்சி என்று இளமை ததும்பும் விதமாக இருக்கும்.

சமீபத்திய படங்களான விஸ்வரூபம் படத்திலும், பாபநாசம் படத்தில் கூட ரொமான்ஸ் காட்சி நன்றாக இருக்கும். உத்தம வில்லன் படத்தில் ஆண்ட்ரியாவுடன் உதட்டு முத்தக்காட்சி, விஸ்வரூபம் படத்தில் படுக்கையறை காட்சி என்று இளைஞர்களை குதூகலப்படுத்தும் காட்சிகள் கண்டிப்பாக ஏதேனும் ஒன்று கமல் திரைப்படத்தில் இடம்பெறும்.

ஆனால், இவை எதுவுமே இல்லாமல், ஏன் கதாநாயகி கூட இல்லாமல் கடைசியாக வெளியான விக்ரம் திரைப்படம் தாறுமாறு ஹிட் அடித்துள்ளது. தனது வயதுக்கேற்ற கதாபாத்திரத்தை தேர்வு செய்தது, இளம் இயக்குனருடன் கைகோர்த்தது தான் இந்த மிகப்பெரிய வெற்றி கிடைத்ததற்கு காரணம் என கமல்ஹாசன் நம்புகிறாராம்.

அதன் காரணமாக இனி வரும் படங்களில் தனது வயதுக்கேற்ற கதாபாத்திரங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடிப்பது என உறுதி கொண்டுள்ளாராம் கமல்ஹாசன். இனி காதல் காட்சிகளில் நடிப்பதில்லை என்ற முடிவுக்கும் அவர் வந்துள்ளாராம்.

இந்த செய்தியை கேட்ட கமல் ரசிகர்கள் கொஞ்சம் ஷாக் ஆகிதான் உள்ளனர். ஏன் என்றால் கமல் படம் என்றாலே இளமை ததும்பும் காட்சிகள் இருக்கும். ஆனால் இனி அவற்றை பார்க்க முடியாதே என்று வருத்தத்தில் இருக்கின்றனராம். இருந்தாலும் விக்ரம் திரைப்படம் போல நல்ல கதைகளை தேர்வு செய்து ரசிகர்களை மகிழ்வித்தால் போதுமென்ற மனநிலையில் இருக்கின்றனர் ரசிகர்கள்.

Views: - 567

1

0