தமிழக அரசுக்கு எதிராக தடையை மீறி போராட்டம்… நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கைது..!!

Author: Babu Lakshmanan
4 May 2024, 11:33 am

வடலூரில் வள்ளலார் கோவிலில் கட்டுமானப் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து தடையை மீறி கரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர்.

வடலூரில் வள்ளலார் கோவிலில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெய்வத் தமிழ் பேரவை மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என சீமான் அறிவித்திருந்தார். ஆனால், போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்து விட்டது.

மேலும் படிக்க: ‘வேண்டும் என்றே செஞ்ச மாதிரி இருக்கு’… சவுக்கு சங்கரை அழைத்து வந்த வாகனம் விபத்து ; சந்தேகத்தை கிளப்பும் அதிமுக!!!

அனுமதி தராத நிலையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வடலூர் செல்ல இருப்பதாக தகவல் தெரிந்ததன் அடிப்படையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரூர் மாவட்ட செயலாளர் நன்மாறன் அலுவலகத்தில் நிர்வாகிகள் உட்பட 10 பேர் போலீசார் கைது செய்தனர்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?